news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news குடியரசு துணை தலைவராக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்
tv

Also Watch

tv

Read this

குடியரசு துணை தலைவராக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்

நிகழ்ச்சியில் ஜகதீப் தன்கர் பங்கேற்பு

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
cpr

நாட்டின் 15ஆவது குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்றார்.

குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர் உடல்நிலை காரணமாக கடந்த ஜூலை 21ஆம் தேதி பதவியை ராஜினமா செய்தார். இதை அடுத்து, அந்த பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, மகாராஷ்டிர ஆளுநராக இருந்தவரும் தமிழகத்தைச் சேர்ந்தவருான சி.பி.ராதாகிருஷ்ணனை களமிறக்கியது. எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற சுதர்சன் ரெட்டி களமிறக்கப்பட்டார். கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

இதையடுத்து, குடியரசு துணைத் தலைவராக இன்று அவர் பதவியேற்றார். குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கடவுளின் பெயரால் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆங்கிலத்தில் பதவியேற்றுக்கொண்டார்.


இந்நிகழ்வில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், வெங்கைய்யா நாயுடு, ஹமீத் அன்சாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் பாருங்கள்; குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்.. | Vice President CP Radhakrishnan

பதவி ஏற்பு விழாவில் ஜெகதீப் தன்கர் | Vice President CP Radhakrishnan | Oath Ceremony

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பட்டு திருந்துங்கள், அப்போது தான் புத்தி வரும் - நடிகர் சத்யராஜ் கோபம்

3
12 mins agoshare
கண் கலங்கிய நடிகர் சத்யராஜ்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved