news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news வீட்டிற்குள் தாய், 3 மகள்கள் சடலம், CCTVயில் சிக்கிய குற்றவாளி
tv

Also Watch

tv

Read this

வீட்டிற்குள் தாய், 3 மகள்கள் சடலம், CCTVயில் சிக்கிய குற்றவாளி

சமய்பூர், டெல்லி

31

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பக்கத்து வீட்டிலிருந்து வீசிய கடும் துர்நாற்றம். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது காத்திருந்த பேரதிர்ச்சி. தாய் மற்றும் 3 மகள்கள் கழுத்தறுக்கப்பட்டு சடலமாக கிடந்த பயங்கரம். சடலங்களை வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டு தப்பியோடிய இளைஞர். சிசிடிவி கேமராக்களை வைத்து கொலையாளியை சுற்றி வளைத்த காவல்துறையினர். மனைவி மற்றும் மகள்களை இளைஞர் ஈவு, இரக்கமின்றி கொன்றது ஏன்? பின்னணி என்ன?

* பக்கத்து வீட்டில் இருந்து வீசிய கடும் துர்நாற்றம்
* காவல்துறையினருக்கு தகவல் கொடுத்த மக்கள்
* வீட்டிற்குள் சடலமாக கிடந்த தாய், மகள்கள்


டெல்லி, சமய்பூர்ல ஒரு வீட்டுல இருந்து துர்நாற்றம் வீசுறதா அக்கம்பக்கத்துல உள்ளவங்க போலீஸுக்கு தகவல் சொல்லிருக்காங்க. அடுத்த கொஞ்ச நேரத்துல போலீஸ் சம்பவ இடத்துக்கு போய் பாத்தப்ப, நாலு பேரோட சடலங்கள் கிடந்திருக்கு. அதுவும் மூணு சின்ன பசங்க, ஒரு பெண் சடலமா கிடந்திருந்தத பாத்து ஷாக்காகிருக்காங்க. நாலு சடலங்களையும் கைப்பற்றி போஸ்ட் மார்டத்துக்கு அனுப்புன கையோட, என்ன நடந்துச்சுங்குறத கண்டுபிடிக்க விசாரணையில இறங்குனாங்க. அப்ப தான், இறந்து கிடக்குறது, தாய் அனிதா, அவங்களோட மூணு மகள்கள்னு தெரிய வந்துச்சு. தாயையும், மூணு மகள்களையும் கொன்னது யாரு? இப்படி கொடூரமா கொலை பண்ணதுக்கு என்ன காரணம்னு விசாரிக்க ஆரம்பிச்சிருக்காங்க.

* சடலங்களை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பிய போலீஸ்
* 4 பேர் கொ* செய்யப்பட்ட ஏரியாவில் போலீஸ் குவிப்பு
* சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த காவல்துறையினர்

வழக்கமா எல்லா கேஸையும் விசாரிக்கிற மாதிரி விசாரிக்காம, இந்த கொலையில கண்ணும் கருத்துமா இருந்துருக்காங்க போலீஸ். ஏன்னா, அந்த ஏரியாவுல அரசு அதிகாரிகள் நெறைய பேரு குடும்பத்தோட வசிச்சிட்டு வர்றாங்க. அதனாலே, அங்க எந்நேரமும் போலீஸ் பாதுகாப்பு இருப்பது வழக்கம். அப்படிப்பட்ட, அந்த ஏரியாவுல தாயையும், மூணு மகள்களையும் கொன்னது யாருன்னு அங்க உள்ள 30க்கும் அதிகமான சிசிடிவி கேமராக்கள ஒண்ணுவிடாம அலசிருக்காங்க. அதுல, வெளியாட்கள் யாரும் ஏரியாவுக்குள்ள நுழைஞ்ச மாதிரியும் இல்ல. ஆனா, ஒரு சிசிடிவி கேமராவுல மட்டும் நடுராத்திரி நேரத்துல இளைஞர் ஒருத்தரு பைக்குல போனது பதிவாகிருந்துச்சு. அந்த சிசிடிவி காட்சி பதிவுகள கைப்பற்றுன போலீஸ்காரங்க, இளைஞர் யாருன்னு விசாரிச்சிருக்காங்க. அப்போ தான், அந்த இளைஞர், கொலை செய்யப்பட்ட அனிதாவோட கணவன் முன்சுன் கேவட்னு தெரிய வந்துச்சு.

* நள்ளிரவில் பைக்கில் சென்ற இளைஞர் யார் ?
* சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து தேடுதல் வேட்டை
* முன்சுனை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை


வீட்டுல மனைவியும், மூணு குழந்தைகளும் இறந்து கிடக்குறாங்க, முன்சுன் நடுராத்திரி பைக்க எடுத்துட்டு போனது போலீஸுக்கு பல சந்தேகங்கள எழுப்பிருக்குது. அதேநேரம், முன்சுன பிடிச்சா தான், எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்னு சிசிடிவி பதிவுகள வச்சி தீவிர தேடுதல் வேட்டையில ஈடுபட்டாங்க. அதுல, முன்சுன் ராஜஸ்தான்ல இருக்குறதா தகவல் வந்துச்சு. உடனே, ஸ்பாட்டுக்கு கிளம்புன போலீஸ், ராஜஸ்தான் ஹைவேஸ்ல முன்சுன மடக்கிருக்காங்க. அதுக்குப்பிறகு, அவர ஸ்டேஷனுக்கு அழைச்சிட்டு வந்து விசாரணை பண்ணிருக்காங்க. அப்ப, முன்சுன் கேவட் சொன்னது போலீஸையே ஒரு நிமிஷம் கதிகலங்க வச்சிருக்குது.


Related Link

"குடும்ப கவுரவத்துக்காக இப்படி பண்ணேன்"

* முன்சுன் - அனிதா தம்பதிக்கு மூன்று மகள்கள்
* மனைவி அனிதாவின் நடத்தை மீது சந்தேகம்
* அனிதாவை துன்புறுத்தி வந்த கணவன் முன்சுன்

பீகார் மாநிலத்த சேர்ந்த முன்சுன் - அனிதா தம்பதிக்கு மூணு பெண் பிள்ளைகள் இருந்தாங்க. மூணு பேருக்கும், நாலு வயசுல இருந்து ஆறு வயசு இருக்கும். இந்த சூழல, பிழைப்புக்காக டெல்லிக்கு வந்த குடும்பம், அங்கேயே தங்கிருந்து வாழ்க்கைய நடத்திட்டு இருந்தாங்க. வாழ்க்கை நல்லபடியா போயிட்டு இருந்த நிலையில, முன்சுனுக்கு மனைவி அனிதாவோட நடத்தை மேல சந்தேகம் வந்திருக்கு. எதுக்கெடுத்தாலும், எது பண்ணாலும் மனைவிய சந்தேகப்பட்டு, முன்சுன், அனிதாகிட்ட தகராறு பண்ணிட்டே இருந்ததா சொல்லப்படுது. சில நாட்களுக்கு முன்னாடி, கணவன் - மனைவிக்கு இடையில பயங்கர தகராறு ஏற்படவே, முன்சுன், கோவத்துல மனைவிய அடிச்சு துன்புறுத்திருக்கான். சம்பவத்தன்னைக்கு நைட்டு கணவன் - மனைவி இடையில மறுபடியும் சண்ட வந்திருக்குது.


* கணவன் - மனைவி இடையே மீண்டும் ஏற்பட்ட தகராறு
* மனைவி அனிதாவின் கழுத்தை அறுத்து கொ*ற முன்சுன்
* அழுது கொண்டிருந்த மகள்களின் கழுத்தையும் அறுத்த கொடூரம்
* 4 சடலங்களை வீட்டில் வைத்து பூட்டி விட்டு தப்பியோட்டம்
* முன்சுனை கைது செய்து காவல்துறையினர் விசாரணை


அப்போ, மதுபோதையில இருந்த முன்சுன், மனைவி அனிதாவோட கழுத்த கத்தியால அறுத்து துடிக்க துடிக்க கொன்னுருக்கான். இந்த கொடூர சம்பவத்த பாத்து வீட்டுல இருந்த பிள்ளைகள் அழுதுருக்காங்க. அப்ப, மனைவியோட கழுத்த அறுத்து கொலை செஞ்ச அதே கத்தியால, கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லாம, மூணு மகள்களோட கழுத்த அறுத்து கொடூரமான முறையில கொன்னுருக்கான். அதுக்குப்பிறகு, கொஞ்ச நேரம் மனைவி, மகள்களோட சடலங்கள் பக்கத்துல உக்காந்துட்டு இருந்த முன்சுன், போலீஸுக்கு பயந்து அங்க இருந்து தப்பிச்சு போயிருக்கான். போகும்போது யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது அப்டிங்குறதுக்காக, வீட்டு கதவ வெளிப்பக்கமா பூட்டு போட்டு போயிருக்கான் முன்சுன். விசாரணையில, மொத்த உண்மையும் தெரியவரவே, முன்சுன் மேல கொலை வழக்குப்பதிவு செஞ்ச போலீஸ், அவன அரெஸ்ட் பண்ணி சிறையில தள்ளிட்டாங்க.


Related Link
கால்வாயில் மனைவி சடலம், சைக்கோவாக மாறிய கணவன்

கால்வாயில் மனைவி சடலம், சைக்கோவாக மாறிய கணவன்

              


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜக பம்மாத்து, அடிமை சாமி, பிரச்சாரத்தில் கர்ஜித்த ஸ்டாலின்

4
11 mins agoshare
முகஸ்டாலின் தேர்தல் பரப்புரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved