news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news சட்டமன்ற ரூட்டை மாற்றி சிறைக்கு சென்ற திமுக எம்எல்ஏ
tv

Also Watch

சட்டமன்ற ரூட்டை மாற்றி சிறைக்கு சென்ற திமுக எம்எல்ஏ

மிரட்டல் என ஆஸ்பத்திரியில் அலறல்

19

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை வீட்டில் வைத்தே போலீசார் தட்டித் தூக்கிய நிலையில், அவரை ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. சட்டமன்றத்திற்குள் முதலமைச்சரை தாக்குவேன் என சவடால் விடுத்தவர், தற்போது சிறைக்குள் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

தூத்துக்குடி திமுக பொதுக்கூட்டம்
விமர்சனம் என்ற பெயரில் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி வழக்கை வாங்கிக் கட்டிக் கொள்வது திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு சகஜம் தான் என்றாலும், வழக்கத்திற்கு மாறாக, அரெஸ்ட் ஆகி கம்பி எண்ணிக் கொண்டிருப்பது தான் அறிவாலய வட்டாரத்தையே அசைத்து பார்த்திருக்கிறது. தூத்துக்குடியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், மைண்ட் வாஸ் என நினைத்து, மனதில் பட்டதையெல்லாம் ஓபனாக பேசி, வாண்டடாக வந்து வழக்கில் சிக்கிக் கொண்டவர் தான் விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்.

காலையிலேயே வந்த போலீஸ்
முதல்வர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், சொந்த மாவட்டத்தை சேர்ந்த முக்கிய புள்ளி கைதாகி, போலீசிடம் அல்லோகலப்பட்டது தெரிந்தும் மீண்டும் வரம்பு மீறி பேசியதால், காலையிலேயே வீட்டு கதவை தட்டி கைது செய்தது மாவட்ட குற்றிப்பிரிவு போலீஸ். பக்கம் பக்கமாக ரூல்ஸ் பேசியும், ஆதரவாளர்களை வைத்து சவுண்ட் கொடுத்தும் எதுவும் எடுபடாததால் சத்தமில்லாமல் எஸ்.பி. அலுவலகத்திற்கு சென்றார் மார்க்கண்டேயன்.

போலீசார் விசாரணை
திமுகவினரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் காலை 8 மணிக்கு மார்க்கண்டேயனுடன் போலீஸ் கார் எஸ்பி அலுவலகத்திற்குள் நுழைந்தது. அங்கு அவரை உட்கார வைத்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர். முதல்வர் குறித்து அவதூறாக பேசியதன் நோக்கம் என்ன? உண்மையில் சட்டமன்றத்தில் முதல்வரை தாக்க சதித் திட்டம் தீட்டப்பட்டதா? போன்ற பல கேள்விகளை போலீசார் கேட்க, அதற்கு மார்க்கண்டேயன் கொடுத்த பதில்கள் அனைத்தும் வீடியோ பதிவாகவும், கணினியிலும் பதிவு செய்யப்பட்டன.

திமுகவினர் போராட்டம்
இதற்கிடையே ஒரே மாவட்டத்தை சேர்ந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டதால் கொந்தளித்த உடன்பிறப்புகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் ஏராளமானோர் ஒன்று சேர்ந்து தவெக அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர். அதேபோல் மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் இதேநிலை நீடித்தததால், முன்னேச்சரிக்கையாக கீதா ஜீவன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்த நிலையில், அதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்ததால் தூத்துக்குடி மாவட்டமே வெலவெலத்து போனது.

மிரட்டுகிறார்கள் என கூச்சல்
இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மார்க்கண்டேயனிடம் காலை 8 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 7 மணி வரை நீடித்தது. சுமார் 11 மணி நேரம் நடைபெற்ற கிடுக்குப்பிடி விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முன், மார்க்கண்டேயன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் அங்கு வருவதை முன்கூட்டியே அறிந்து ஆதரவாளர்கள் குவிந்த நிலையில், செய்தியாளர்களை பார்த்ததும், துப்பாக்கி முனையில் தன்னை மிரட்டுகிறார்கள் என மார்க்கண்டேயன் என கத்தி கூச்சலிட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

அக்யூஸ்ட் என கூறியதால் கொந்தளிப்பு
போலீசார் தம்மை கொல்ல முயற்சிப்பதாக, மார்க்கண்டேயன் கூறியதை கேட்டதும், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனே அவரை பார்க்க வேண்டும் என கூறி போலீசிடம் மல்லுக்கட்டினர். ஆனால், உள்ளே அனுமதி முடியாது என கறாராக கூறிய ஏ.டி.எஸ்.பி., எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை அக்யூஸ்ட் என குறிப்பிட்டதால் திமுகவினர் கொந்தளித்தனர்.

திமுக எம்எல்ஏ சிறையில் அடைப்பு
ஒருவழியாக அவர்களை சமாளித்து, இரவு 9 மணிக்கு மேல் தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் சுமதி முன்பு மார்க்கண்டேயனை போலீசார் ஆஜர்படுத்தினர். அங்கு இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பிறகு, ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை மார்க்கண்டேயனை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் மார்க்கண்டேயன் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Link
சட்டத்தின் ஆட்சியா? சாத்தானின் ஆட்சியா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி

சட்டத்தின் ஆட்சியா? சாத்தானின் ஆட்சியா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பராமரிப்பின்றி மின்கம்பங்களால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved