news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தற்காலிக சபாநாயகராக கருப்பையா தேர்வு
tv

Also Watch

tv

Read this

தற்காலிக சபாநாயகராக கருப்பையா தேர்வு

புதிய எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு

17

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழ்நாட்டின் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தவெக எம்.எல்.ஏ. எம்.வி.கருப்பையாவை தேர்வு செய்யும் கோப்பில் முதல்வர் விஜய் கையெழுத்திட்டார்.

முதல்வர் நாற்காலியில் விஜய்
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் நாற்காலியில் விஜய் அமர்ந்து அரசு அலுவல்களை தொடங்கினார். தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற விஜய் தலைமை செயலகம் வந்தார். காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். தற்காலிக சபாநாயகருக்கான உத்தரவில் கையெழுத்திட்டார்.

நாளை சட்டப்பேரவை
தமிழ்நாடு சட்டப்பேரவை நாளை காலை 9.30 மணிக்கு கூடுகிறது. தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள சோழவந்தான் எம்.எல்.ஏ. கருப்பையா முன்னிலையில் புதிதாக தேர்வாகியுள்ள எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்க உள்ளனர். மே12ம் தேதி புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு, பொறுப்பேற்றுள்ள புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும்.

புதிய எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் நாளை பதவிப்பிரமாணம் செய்து கொள்கின்றனர். தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதல்வருமான விஜய், வரும் மே 13ஆம் தேதிக்குள் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். உறுப்பினர்கள் பதவியேற்ற பிறகு, புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 2026 தேர்தலில் வெற்றி பெற்ற புதிய எம்.எல்.ஏ-க்களின் முதல் கூட்டம் என்பதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உ ள்ளது

Related Link
விழா மேடையிலேயே முதல்வர் விஜயின் முதல் கையெழுத்து

விழா மேடையிலேயே முதல்வர் விஜயின் முதல் கையெழுத்து

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாகிஸ்தான் வான்வெளிக்குள் புகுந்த ஏர் இந்தியா விமானம்

0
5 mins agoshare
ஏர் இந்தியா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau