news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news சட்டப்பேரவையில் ஒலித்த விஜயின் குரல்
tv

Also Watch

tv

Read this

சட்டப்பேரவையில் ஒலித்த விஜயின் குரல்

எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு

28

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தற்காலிக சபாநாயகர் கருப்பையா முன்னிலையில் பெரம்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக முதலமைச்சர் ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். தவெக அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தில் முறைப்படி பதவியேற்று பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டார்.

சட்டப்பேரவை முதல் கூட்டம்
17ஆவது சட்​டப்​பேர​வை​யின் முதல் கூட்​டம் இன்று மே 11ஆம் தேதி தொடங்கியது. தற்​காலிக சட்டப்பேர​வைத் தலைவர் கருப்பையா முன்​னிலை​யில், முதலமைச்சர் விஜய் உட்பட பேர​வை​யின் அனைத்து உறுப்​பினர்​களும் எம்​எல்​ஏ​வாக பதவி​யேற்றனர்.

தமிழக முதலமைச்சராக விஜய்
தமிழக முதல்வராக தவெக தலை​வர் ஜோசப் விஜய், மே 10ஆம் தேதி பதவியேற்​றார். இதனை தொடர்ந்து, தற்​காலிக பேர​வைத் தலை​வ​ராக சோழ​வந்​தான் தொகுதி தவெக எம்எல்ஏ எம்​.​வி.கருப்​பை​யாவை நியமிப்​ப​தற்​கான கோப்​பில், முதல்​வர் ஜோசப் விஜய்​யிடம், பேரவைச் செயலர் சீனி​வாசன் ஒப்​புதல் பெற்​றார்.

தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம்

ஆளுநர் மாளி​கை​யில், தற்​காலிக பேர​வைத் தலை​வ​ராக கருப்பையா​வுக்கு ஆளுநர் அர்​லேகர் நேற்று மாலை 4 மணிக்கு பதவிப் பிர​மாணம் செய்து வைத்​தார். இந்​நிகழ்​வில், முதல்​வர் விஜய், அமைச்​சர்​கள், அதி​காரி​கள் பங்​கேற்​றனர்.

எம்எல்ஏக்கள் பொறுப்பேற்பு
இந்நிலையில், 17ஆவது சட்​டப்​பேர​வை​யின் முதல் கூட்​டம் இன்று மே 11ஆம் தேதி காலை தொடங்கியது. இதில் பங்கேற்பதாக தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட வெற்றி பெற்ற கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரும் சட்​டப்​பேர​வைக்கு வருகை தந்தனர்.

உறுப்பினர்கள் உறுதிமொழி
சரியாக 9.30 மணிக்கு சட்​டப்​பேரவை​யின் முதல் கூட்​டம் தற்காலிக சபாநாயகர் தலைமையில் தொடங்கியது. சபாநாயகர் உரைக்குப் பிறகு முதல்வர் விஜய் உட்பட உறுப்பினர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். முதலமைச்சர் விஜய் பதவியேற்பின்போது வந்தது போலவே இன்றும் கோட் சூட்டில் வருகை தந்தார்.

தனித்தனியாக அதிமுக

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு குழுவாகவும், எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு குழுவாகவும் தனித்தனியாக வந்தனர். இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளவில்லை என்பது பேசு பொருளாகி உள்ளது.

Related Link
தற்காலிக சபாநாயகராக கருப்பையா பொறுப்பேற்பு

தற்காலிக சபாநாயகராக கருப்பையா பொறுப்பேற்பு



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

'ஆமா, நான் கர்ப்பமாக தான் இருக்கேன்..'

0
37 mins agoshare
சமந்தா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau