Also Watch
Read this
By: Web Team

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில்,இந்திய கேப்டன் சுப்மன் கில் அவசரப்பட்டு ஓடி ரன் அவுட் ஆனார்.
கஸ் அட்கின்சன் வீசிய 27-வது ஓவரின் 2-வது பந்தை எதிர்கொண்ட சுப்மன் கில், அதனை அடித்து விட்டு ரன் எடுக்க வேகமாக ஓடினார்.
ஆனால் மறுமுனையில் இருந்த சாய் சுதர்சன் வேண்டாம் என்றதும், சுப்மன் கில் மீண்டும் கிரீசுக்குள் செல்ல ஓடினார்.
அதற்குள் பந்தை பிடித்த கஸ் அட்கின்சன் ஸ்டம்பை நோக்கி துல்லியமாக அடித்து சுப்மன் கில்லை ரன் அவுட் செய்தார்.