Also Watch
Read this
By: Web Team

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 29 வயதான பூரன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக இதுவரை 167 சர்வதேச போட்டிகளிலும், பல்வேறு டி20 லீக் தொடர்களிலும் விளையாடி உள்ளார்.
அதிரடியான பேட்டிங்கால் பூரனுக்கு ஐபிஎல் தொடரில் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் பூரன் தனது ஓய்வு முடிவை அறிவித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நீண்ட யோசனைக்குப் பிறகு ஓய்வு முடிவை எடுத்திருப்பதாக கூறியுள்ள பூரன், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் மீதான தனது அன்பு எப்போதும் மறையாது எனவும் ஓய்வு அறிக்கையில் கூறியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved