Also Watch
Read this
By: Manigandan Raja

பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடைபெறும் என தகவல் :
அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு ஆசியாவில் போரை முடிவுக்கு கொண்டு கடந்த மாதம் 18ஆம் தேதி அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
பின்னர் 21ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் அமைதி பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. இந்நிலையில் வரும் 11ஆம் தேதி இரு தரப்பும் பாகிஸ்தானில் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தலாம் எனக் கூறப்படுகிறது.
பாகிஸ்தானை கண்டித்து ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் :

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தானை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில், பலரும் குண்டுக் காயமடைந்தனர்.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தானின் அத்துமீறல், நிர்வாக தோல்வியை கண்டித்தும், சட்டவிரோதமாக கைது செய்தவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் சர்தார் குலாம் ஹூசைன் கான் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர்.
துதியால் என்ற இடத்தில் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
அமெரிக்காவுக்கு நாகரிகமோ, வரலாறோ, மானமோ கிடையாது :

கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்றுள்ள தலைவர்களை ஒரே குண்டில் ஒட்டுமொத்தமாக அழித்துவிட முடியும் என்று கூறிய அதிபர் டிரம்ப் பேச்சுக்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.
ஆர்மீனியாவில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அமெரிக்காவுக்கு என்று சொந்தமாக நாகரிகமோ, வரலாறோ அல்லது மானமோ கிடையாது என கடுமையாக விமர்சித்துள்ளது.
மேலும், மனிதர்களை கொல்ல முடியும், ஆனால் கொள்கைகளை கொல்ல முடியாது எனவும், கமேனி என்கிற ஒரு நறுமண பாட்டிலை உடைத்துள்ளதாகவும், அதன் வாசம் தற்போது எல்லா இடங்களிலும் பரவத் தொடங்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.