Also Watch
Read this
By: Manigandan Raja

ஆடம்பரமான ஜெட் விமானத்தில் முதல் பயணத்தை மேற்கொள்ளும் டிரம்ப் :
கத்தார் பரிசளித்த ஜெட் விமானத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முதன்முறையாக பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் கத்தார் பரிசாக அளித்த உலகின் ஆடம்பரமான ஏர் ஃபோர்ஸ் ஒன் 747 என்ற விமானத்தில் அடுத்த வாரம் இறுதியில் டிரம்ப் தனது முதல் பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக வெள்ளைமாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிகழ்விற்காக வரும் புதன்கிழமையன்று வட டகோட்டா பகுதிக்கு டிரம்ப் செல்ல உள்ளார்.
மேற்கு ஆப்ரிக்க நாடான கானாவில் கடும் வெள்ளப்பெருக்கு :

மேற்கு ஆப்ரிக்க நாடான கானா ((ghana)) தலைநகர் Accra-வில் தொடர் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திங்கட்கிழமை பல மணி நேரத்துக்கு இடைவிடாமல் கனமழை கொட்டித் தீர்த்ததால், நகரின் பல்வேறு பகுதிகளும் வெள்ளக்காடாக மாறியது. சில பகுதிகளில் வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் அவசரகால மீட்புக் குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ரப்பர் தொழிற்சாலை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுவதால், தீயணைப்பு வீரர்கள் நிகழ்விடத்துக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டது.