news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கடுப்பில் உலாவரும் ஊசிக்கொம்பன்
tv

Also Watch

கடுப்பில் உலாவரும் ஊசிக்கொம்பன்

கோவை மாவட்டம்

80

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
cbe 1(6)

ஆனைமலை அடுத்த ஆழியார் சின்னார்பதி அருகே அடிக்கடி சாலையில் ஊசிக்கொம்பன் காட்டு யானை உலா வருவதால் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ளுமாறு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

உணவுத்தேடி வந்த ஊசிக்கொம்பன்
ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால் அங்குள்ள வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி பொதுமக்கள் பயணிக்க கூடிய சாலையில் உலா வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று மாலை ஆழியார் சின்னார் பதி அருகே பொதுமக்கள் பயணியக் கூடிய சாலையில் உணவு தேடி ஊசிக்கொம்பன் என்கின்ற ஒற்றை காட்டு யானை உலா வருகிறது. இதனால் வனத்துறையினர் உடனடியாக அவ்வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி யானைக்கு வழிவிட்டனர்.

வனவிலங்குகளை தொந்தரவு செய்ய வேண்டாம்
இதனை அடுத்து யானை சிறிது நேரம் கழித்து ஆழியார் அணைப் பகுதிக்கு சென்றது. சாலையில் இருந்து அணைப்பதைக்குள் சென்றதைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் அதனை தங்கள் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர். இதனை கண்ட வனத்துறையினர் யானை மற்றும் வன விலங்குகளை கண்டால் தொந்தரவு செய்யும் விதமாக புகைப்படம் எடுக்கக் கூடாது எனவும் அவ்வாறு தொந்தரவு செய்யும் சுற்றுலா பயணிகளை கண்டால் அவர்களுக்கு மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Link
பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

யமஹாவின் Blast அறிமுகம்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved