news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதி பயங்கர விபத்து
tv

Also Watch

tv

Read this

இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதி பயங்கர விபத்து

மதுரை

12

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mdu accident

வேன் மோதி பயங்கர விபத்து :

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரைச் சேர்ந்தவர் ராஜகுரு., கட்டிட தொழிலாளியான இருவரது அண்ணன் ராஜ்குமார் மகள் பிரமிலா - வை குடும்ப சூழல் காரணமாக ராஜகுரு வளர்த்து வருவதாக கூறப்படுகிறது.

7 வயதான பிரமிலா விற்கு நேற்று நள்ளிரவு உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் தனது இருசக்கர வாகனத்தில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சங்கீதா என்ற பெண்ணுடன் அண்ணன்
மகள் பிரமிலாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

இந்நிலையில் சாலையை கடக்க முயன்ற போது மதுரையிலிருந்து கோவிலாங்குளம் நோக்கி சென்ற வேன் இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ராஜகுரு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 7 வயது சிறுமி பிரமிலா, சங்கீதா இருவரும் படுகாயமடைந்த நிலையில்., அக்கம் பக்கத்தினர் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக இருவரையும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தகவலறிந்து விரைந்து வந்த செக்காணூரணி காவல் நிலைய போலீசார் விபத்தில் உயிரிழந்த ராஜகுரு உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இந்த விபத்து தொடர்பாக வேன் ஓட்டுநர் குறவடியைச் சேர்ந்த பாண்டி என்பவரை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி பிரமிலா மற்றும் சங்கீதா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர். இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் 7 வயது சிறுமி உட்பட 3 பேர் பலியான சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Link
வேப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து விபத்து

வேப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து விபத்து



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
4 hrs 31 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved