Also Watch
Read this
By: Manigandan Raja

நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன :
ராணிப்பேட்டை மாவட்டம் திருப்பாற்கடல் பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் நிகழ்ச்சி மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் மற்றும் தனஞ்செழியன் தலைமையில் திருப்பாற்கடல் ஊராட்சி மன்ற தலைவர் பிரியா தனஞ்செழியன் முன்னிலையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதற்கு முன்னாள் அமைச்சர்கள் K.C.வீரமணி, சேவூர் ராமசந்திரன் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் S.M.சுகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இதனையடுத்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் தற்போது அதிமுகவில் மாவட்ட அம்மா பேரவை பொருளாளராக உள்ள தனஞ்செழியன் என்பவருக்கு சொந்தமான 30 லட்சம் ரூபாய்
மதிப்பிலான வீட்டுமனைகளை அதே கிராமத்தில் பல்வேறு ஆண்டுகளாக எந்த விதமான அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வரும் 5 இருளர் இன குடும்பங்களுக்கு தன்னுடைய வீட்டுமனைகளை கிரையம் செய்து எழுதிக் கொடுத்தார்.
மேலும் அந்த கிரையம் செய்த பத்திரங்களை முன்னாள் அமைச்சர்களான K.C.வீரமணி, சேவூர் ராமச்சந்திரன், ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் S.M.சுகுமார் ஆகியோர் இருளர் இன
குடும்பத்தினரிடம் வழங்கினார்கள்.
அதன் பின்னர் தையல் மிஷின், அயன் பாக்ஸ், விவசாயிகளுக்கு மருந்து தெளிப்பான் ஆண்கள் பெண்கள் என 1000 பேருக்கு வேட்டி சேலை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார்கள்.