news-tamil-logo

3/15/2026, 11:12:57 AM

news-tamil-logo
more
Home districtnews மருமகன் செய்த கொடூர செயல்
tv

Also Watch

tv

Read this

மருமகன் செய்த கொடூர செயல்

கந்தமங்கலம், மயிலாடுதுறை

Posted on: Feb 17, 2026 11:27 AM

15

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்த பெண். பலமுறை சமாதானம் பேச முயன்றும் மனமிரங்காததால் ஆத்திரம். பிரிந்து சென்ற மனைவியையும், எதிராக செயல்பட்ட மாமியாரையும் அரிவாளால் வெட்டி சாய்த்த கணவன். குற்றவாளி சிக்கினானா? நடந்தது என்ன?

வீட்டிலிருந்து கேட்ட பெண்களின் அலறல் சத்தம்

இரவு நேரம், எப்பவுமே ஆள் நடமாட்டம் அதிகமா இருக்குற மயிலாடுதுறை, கந்தமங்கலம் பகுதில உள்ள ஒரு வீட்ல இருந்து ரெண்டு பெண்களோட அலறல் சத்தம் கேட்டுருக்கு. பக்கத்து வீட்டுக்காரங்களும், ரோட்ல போறவங்களும் என்ன ஏதுன்னு அந்த வீட்டையே உத்து பாத்துட்டு இருக்கும்போது, கையில அரிவாளோட ஒருத்தன் வேக வேகமா வீட்டுல இருந்து வெளியேறி ஓடிருக்கான். உடனே போலீஸுக்கு தகவல் போயிருக்கு. ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ், சவுண்டு கேட்ட வீட்டுக்குள்ள போய் பாத்துருக்காங்க. அங்க, நடுவீட்டுல தாயும், மகளும் முகம், கை, கால்ன்னு உடம்புல எல்லா இடத்துலயும் வெட்டு பட்டு ரத்த வெள்ளத்துல கிடந்திருக்காங்க. உடனே ரெண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வச்சாங்க. ஆனா ஹாஸ்பிட்டலுக்கு போற வழியிலேயே தாய் வசந்தா உயிரிழந்துட்டாங்க. மகள் பேபி ராணிய சிகிச்சைக்காக சேத்துருக்காங்க.

பேபிராணி-பன்னீர்செல்வம் தம்பதியிடையே தகராறு
அதுக்கப்புறம், என்ன நடந்துச்சு. யாரு அவங்கள இப்படி பன்னதுன்னு கண்டுபிடிக்க விசாரணைல இறங்குனாங்க போலீஸ். கொல்லப்பட்ட வசந்தாவோட மகள் பேபி ராணிக்கும், கோமல் பகுதிய சேர்ந்த பன்னீர்செல்வத்துக்கும் 20 வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் நடந்துருக்கு. இந்த தம்பதிக்கு ரெண்டு பிள்ளைகள் இருக்காங்க. வாழ்க்கை நல்லபடியா போயிட்டு இருந்த நேரத்துல, கணவன் - மனைவிக்குள்ள அடிக்கடி மனஸ்தாபம் ஏற்பட்டுருக்கு.
இந்த மனஸ்தாபம், போலீஸ் ஸ்டேஷனுக்கு போற அளவுக்கு அதிகமாகியிருக்கு. இந்த மாதிரி பிரச்னைனால பேபிராணியும், பன்னீர்செல்வமும் பிரிஞ்சு வாழ்ந்து வந்துருக்காங்க. என்ன தான் பிரச்னைன்னாலும், என்ன தான் போலீஸ் ஸ்டேஷன் போனாலும், மனைவி பேபிராணி கூட சேந்து வாழனும்ங்குற எண்ணம், பன்னீர்செல்வத்துக்கு இருந்துருக்கு. ஆனா, மனைவிய சமாதானப்படுத்துறதுக்கு எடுத்த முயற்சி எல்லாம் தோல்விலயும் முடிஞ்சிருக்கு. மனைவிக்கிட்ட பன்னீர்செல்வம் பேச முயற்சிக்கும்போதெல்லாம் மாமியார் வசந்தா கூட பன்னீர்செல்வத்துக்கு தகராறு ஏற்பட்டுருக்கு.

மாமியார் தடையாக இருப்பதாக கருதிய மருமகன்
ஒருகட்டத்துல, தனக்கும், மனைவிக்கும் இடைல வரக்கூடிய எல்லா பிரச்சினைக்கும் மாமியார் வசந்தாதான் காரணம்னு தோணிருக்கு. பேபிராணிய சேந்து வாழ விடாம தடுக்குறதுல இருந்து தன்னோட வாழ்க்க இப்படி ஆன வரைக்கும் வசந்தா தான் காரணம்னு நினைச்சு அவங்க மேல பன்னீர்செல்வத்துக்கு செம கோவம் வந்துருக்கு. அந்த கோவம் நாள்பட நாள்பட கொலைவெறியா மாறியிருக்கு.
சம்பவத்தனைக்கு, பேபிராணியும், வசந்தாவும் வீட்டுல தனியா இருந்துருக்காங்க. அப்போ, திடீர்னு அருவாளும் கையுமா வீட்டுக்குள்ள புகுந்த பன்னீர்செல்வம், வீட்டுல வச்சே மாமியார் வசந்தாவ சரமாரியாக வெட்டி சாச்சிருக்காரு. அப்போ, பேபிராணி கணவர் பன்னீர்செல்வத்த தடுக்க போயிருக்காங்க. அப்ப, அவங்களையும் அரிவாளால சரமாரியா வெட்டி போட்டுட்டு அங்க இருந்து எஸ்கேப் ஆகிருக்கான் பன்னீர்செல்வம்.

பன்னீர்செல்வத்த கைது செய்த போலீஸ்
இதுல, வசந்தாவுக்கும், பேபிராணிக்கும் அரிவாள் வெட்டு ஆழமா விழுந்ததால அவங்களுக்கு அதிகப்படியான ரத்தம் வெளியேறி, மாமியார் வசந்தா ஹாஸ்பிட்டலுக்கு போற வழியிலேயே உயிரிழந்துட்டாங்க. மனைவி பேபிராணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருது. அடுத்து, கொலை வழக்குப்பதிவு செஞ்சு, பன்னீர்செல்வத்த வலைவீசி தேடிட்டு வரும் போலீஸ், அவரோட செல்போன் நம்பர ட்ரேஸ் பண்ணிருக்காங்க. அதுல, பன்னீர்செல்வத்தோட செல்போன் கடைசியா, கொலை நடந்த வசந்தா வீட்ல வச்சுதான் ஆன்ல இருந்துருக்கு. அதுக்கப்புறம் அவரோட ஃபோன் ஸ்விட்ச் ஆப்லயே தான் இருக்குது. தப்பி ஓடுனவர போலீஸ் தீவிரமா தேடிட்டு வந்த நிலையில, பாலையூர்ல வச்சு பன்னீர்செல்வத்த மடக்கிப்பிடிச்சு கைது செஞ்சுருக்காங்க போலீஸ்.

Related Link
15 வருட காதல், நொடியில் நடந்த பயங்கரம்

15 வருட காதல், நொடியில் நடந்த பயங்கரம்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் தேர்தல் எப்போது? - வெளியான முக்கிய தகவல்

0
2 mins agoshare
Election newsbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved