Also Watch
Read this
By: Manigandan Raja

பணிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள் :
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தில் நெய்வேலி என்எல்சி நிறுவனம் தனது சுரங்கம் இரண்டு விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வருகிறது இந்த நிலையில் பல்வேறு கிராமங்களுக்கு முழுமையாக இழப்பீட்டுத் தொகையை என்எல்சி நிறுவனம் வழங்கி இருக்கும் நிலையில்.
முத்துகிருஷ்ணாபுரம் கோபாலபுரம் கம்மாபுரம் ஆகிய மூன்று கிராமங்களுக்கு மட்டும் தற்பொழுது வரை சமமான இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை என்று கூறி கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில்.
இன்று இழப்பீட்டுத் தொகை வழங்காத விவசாய நிலங்களில் என்எல்சி நிறுவனம் ஹிட்டாச்சி இயந்திரங்களைக் கொண்டு சுரங்க விரிவாக்க பணிகளை மேற்கொண்டது இது குறித்து
தகவல் அறிந்த முத்துகிருஷ்ணாபுரம் கிராம மக்கள் ஒன்று திரண்டு சுரங்க விரிவாக்க பணிகளை தடுத்து நிறுத்தி.
என்எல்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில் முழுமையான இழப்பீட்ட தொகை வழங்கிய பின்பு விரிவாக்க பணிகளை மேற்கொள்ள விடுவோம் என்று கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால் சுரங்க விரிவாக பணிகளை மேற்கொள்ளாமல் என்எஸ்சி நிறுவன அதிகாரிகள் பின் வாங்கினர்.
மேலும் நாளை பேச்சுவார்த்தைக்காக கிராம மக்களை என்எஸ்சி நிறுவனம் அழைத்துள்ளது பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டா விட்டால் போராட்டம் மேற்கொள்வோம் என எச்சரிக்கை விடுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved