news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews "தாபா" என்ற பெயரில்...
tv

Also Watch

tv

Read this

"தாபா" என்ற பெயரில்...

நாமக்கல்

1168

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
nmk 1

தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள 10 -க்கு மேற்பட்ட ரெஸ்டாரன்ட், தாபா என்ற பெயரில் 24 மணி நேரமும் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக தொடர்ந்து செய்திகள் வெளியிட்டும் புதுச்சத்திரம் மற்றும் இராசிபுரம் காவல்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

24 மணி நேரமும் இயங்கும் தாபாக்கள்
ராசிபுரம் அடுத்த தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாய்ச்சல் பகுதி தேசிய நெடுஞ்சாலை அருகே “வைர மாளிகை”என்ற பெயரில் தாபா செயல்பட்டு வருகிறது.இந்த தாபாவில் 24 மணி நேரமும் கூடுதல் விலைக்கு மது விற்பனை நடைபெற்று வருவது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சட்ட விரோத மது விற்பனை
இதேபோல் ராசிபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தாபாக்களிலும் தொடர்ந்து சட்ட விரோத மது விற்பனை நடைபெற்று வருவது குறித்து பலமுறை செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. அரசு மதுபானங்களை அரசு நிர்ணயித்த விலையை விட குவாட்டருக்கு 100 ரூபாய் கூடுதலாக சட்டவிரோதமாக விற்பனை செய்யும் தாபாவின் உரிமையாளர்கள், புதுச்சத்திரம் காவல் நிலையத்திற்கு மற்றும் நாமக்கல் மதுவிலக்கு போலீசாருக்கு கணிசமான தொகையை கல்லா கட்டி வருவதாகவும் அதனால் காவல் துறை அதிகாரிகளும் கண்டும் காணாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது .


கூடுதலாக பணம் கேட்பதுதான் வேடிக்கை
இது தொடர்பாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் புதுச்சத்திரம் காவல் நிலையம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத புதுச்சத்திரம் போலீசார் செய்திகள் வரும்போது மேலும் கூடுதலாக பணம் கேட்பதுதான் வேடிக்கை என்கின்றனர் அப்பகுதியினர்.


கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தேசிய நெடுஞ்சாலையில் தாபா பெயரில் செயல்படும் இத்தகைய சந்து கடைகளில், தொலைதூரம் பயணம் செல்பவர்கள் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி மது அருந்தி செல்வதால் அதிக விபத்துக்கள் ஏற்படுகிறது. உணவகம் என்ற பெயரில் கள்ளச் சந்தையில் மது விற்பதை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை அதிகாரிகள் மீதும் மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்டும் காணாத போலீசார்
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தாபாக்களில் சட்ட விரோதமாக மது விற்பதாக பலமுறை செய்தி வெளியிட்டும் ராசிபுரம் மற்றும் புதுச்சத்திரம் போலீசார் மதுவிலக்கு துறை அதிகாரிகளுக்கு மாமுல் அதிகமாக வாங்கி கொடுத்து கடைகளை நடத்த அனுமதிப்பது குறிப்பிடத்தக்கது.

Related Link
போனை ஓரம் வை !! கிரவுண்டுல கால வை!!

போனை ஓரம் வை !! கிரவுண்டுல கால வை!!


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுத்த 2 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம் கணிப்பு

9
10 hrs 54 mins agoshare
அடுத்த 2 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம்  கணிப்பு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved