news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மாயா கிருஷ்ண சுவாமி கோயில் குடமுழுக்கு
tv

Also Watch

tv

Read this

மாயா கிருஷ்ண சுவாமி கோயில் குடமுழுக்கு

கன்னியாகுமரி

28

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
kkn 1

நூற்றாண்டு பழமை வாய்ந்த அதங்கோடு மாயா கிருஷ்ண சுவாமி கோயிலில் நடைபெற்ற மகா குடமுழுக்கு மற்றும் கொடிமர பிரதிஷ்டையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். களியக்காவிளை அருகே அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற மாயா கிருஷ்ண சுவாமி கோயில் புனரமைப்பு பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று திருப்பணிகள் நிறைவடைந்தது.


மகா குடமுழுக்கு விழா
இதனை தொடர்ந்து 101 ஆம் ஆண்டு ரோகினி திருவிழா வரும் 25ஆம் தேதி துவங்க உள்ளது. அதன் முன்னோடியாக கோயிலில் இன்று மகா குடமுழுக்கு விழா நடைபெற்றது. குடமுழுக்கை ஒட்டி புதிதாக அமைக்கப்பட்ட கொடிமரத்தின் பிரதிஷ்டை நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம், உஷபூஜை, பிரம்ம கலாசாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

டிரோன் மூலம் தெளிக்கப்பட்ட தீர்த்தம்
இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் கோயிலை சுற்றி நின்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது பெரிய ட்ரான் மூலம் அபிஷேக தீர்த்தம் தெளிக்கப்பட்டு அருள் ஆசி வழங்கபட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Related Link
திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்

திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
44 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved