Also Watch
Read this
By: Manigandan Raja

மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள மதுரை்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ராஜகம்பீரம் ஒட்டிய பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையோரம் முழுவதுமாக மூட்டை மூட்டையாக ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.
இதனால் இறைச்சி கழிவுகளில் இருந்து புழுக்கள் மற்றும் கடும் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியில் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது சாலை முழுவதிலும் கோழி இறைச்சிகளின் குடல் கழிவுகள் என அனைத்தும் கொட்டப்பட்டுள்ள நிலையில் வெடித்து சிதறி துர்நாற்றம் வீசும் போது வாகனங்கள் கழிவுகளை ஏற்றி செல்வதால் இறைச்சி கழிவுகள் ஆங்காங்கே சிதறி துர்நாற்றம் வீசிவருகிறது மேலும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தில் செல்பவர்கள் மூக்கை பொத்தியபடி செல்லும் அளவிற்கு இறைச்சிக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.

இந்த இறைச்சி கழிவுகள் கேரளா மாநிலத்திலிருந்து வாகனங்கள் மூலம் கொண்டுவரப்பட்டு கொட்டப்படுகிறதா அல்லது மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து இறைச்சி கடைகளில் இருந்து வாகனங்களில் சட்டவிரோதமாக கொட்டப்படுகிறதா?
என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது மேலும் அதே பகுதியில் பல்வேறு மருத்துவ கழிவுகளும் தொடர்ந்து கொட்டப்பட்டுவருகிறது குறிப்பிடதக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved