Also Watch
Read this
By: Manigandan Raja

பாதி எரிந்த நிலையில் இளம்பெண்ணின் எலும்பு கூடு :
கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை தனியார் பொறியியல் கல்லூரி மற்றும் நர்சிங் கல்லூரி அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்கு அருகே ஆள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த புதருக்கிடையே உள்ள குட்டையில் மனித எலும்பு கூடு கிடப்பதாக அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் இரணியல் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இரணியல் போலீஸார் கம்பிகளால் கட்டப்பட்டு ஹெர் பின்னுடன் கூடிய நீண்ட தலைமுடி அரைகுறை ஆடைகளுடன் பாதி எரிந்த நிலையில்
சடலமாக கிடந்த இளம்பெண்ணின் எலும்பு கூடுகளை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு.
அந்த அடையாளம் தெரியாத இளம்பெண் யார்? கொலை செய்து எரிக்கப்பட்டாரா ? பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என தடயங்களை சேகரித்து விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்
இந்த நிலையில் கல்லூரிகள் விடுதிகள் செயல்பட்டு வரும் சுங்கான்கடை பகுதியில் புதருக்கிடையே குட்டையில் அரைகுறை ஆடைகளுடன் பாதி எரிந்த நிலையில் இளம்பெண்ணின் எலும்பு கூடு மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.