news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews வேட்பாளர் ரேஸில் 3 பேர், முந்தும் முன்னாள் அமைச்சர்
tv

Also Watch

tv

Read this

வேட்பாளர் ரேஸில் 3 பேர், முந்தும் முன்னாள் அமைச்சர்

பாளையங்கோட்டை வாக்காளப் பெருமக்களே... தேர்தல் 2026

53

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பாளையங்கோட்டை தொகுதியில் திமுக உட்கட்சி பிரச்சனைகளுக்கு இடையே இந்த முறை தேர்தலில் போட்டியிட போகும் வேட்பாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சிட்டிங் எம்.எல்.ஏ.க்கு வாய்ப்பு குறைவு என கூறப்படும் நிலையில், தற்போது உள்ள ரேஸில் முன்னாள் அமைச்சர் மைதீன் கான் உட்பட இரண்டு பேர் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Link
ஆர்.கே.நகர் - ஆழம் பார்க்கும் சேகர்பாபு, சிட்டிங் MLA மும்முரம்

ஆர்.கே.நகர் - ஆழம் பார்க்கும் சேகர்பாபு, சிட்டிங் MLA மும்முரம்

* திமுக கோட்டையாக உள்ள பாளையங்கோட்டை தொகுதி
* சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் தொகுதியாக உள்ளது
* தொடர்ந்த 4 முறை வெற்றி பெற்ற டி.பி.எம்.மைதீன் கான்


நெல்லை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் திமுக கோட்டையாக இருந்து வரும் பாளையங்கோட்டை (Palayamkottai) தொகுதியில், இந்த முறை தேர்தலில் போட்டியிட யாருக்கு வாய்ப்பு? என்ற எதிர்பார்ப்பு தான் திமுகவினர் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
சிறுபான்மையினர் அதிகளவு வசிக்கும் பாளையங்கோட்டை தொகுதியில் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 சட்டமன்ற தேர்தலிலும் திமுக தான் வெற்றி பெற்று வருகிறது. 2001, 2006, 2011 மற்றும் 2016 என 4 முறை டி.பி.எம்.மைதீன் கான் தொடர்ந்து வெற்றி பெற்றதோடு சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் பணியாற்றினார். கடந்த 2021 தேர்தலில் அப்துல் வகாப் வெற்றி பெற்றார்.

* சுற்றுச்சூழல் அமைச்சராக பணியாற்றியவர் மைதீன் கான்
* கடந்த 2021 தேர்தலில் அப்துல் வகாப் வெற்றி பெற்றார்
* திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளராக உள்ள அப்துல் வகாப்


வயது மூப்பை காரணம் காட்டி நெல்லை மத்திய மாவட்ட செயலாளராக இருந்த டி.பி.எம்.மைதீன்கானிடம் இருந்து அந்த பதவியை வாங்கி அப்துல் வகாப் இடம் கொடுத்தது அக்கட்சியின் தலைமை. தொடர்ந்து அவர் மீது எழுந்த குற்றச்சாட்டு மற்றும் அதிருப்தி காரணமாக ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே மாவட்ட செயலாளராக இருந்த அப்துல் வகாப் அந்த பதவியை இழந்து தற்போது நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளராக இருந்து வருகிறார். சட்டமன்ற உறுப்பினராக உள்ள அப்துல் வகாப் பாளையங்கோட்டை தொகுதிக்கு தேவையான சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கூட செய்து தரவில்லை என கூறப்படுகிறது. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள போக்குவரத்து நெரிசலை தீர்க்க இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது. பல ஆண்டுகளாக சுற்றுச்சாலைகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அப்படியே கிடப்பில் தான் உள்ளது.

* அப்துல் வகாப் மீது கட்சி தலைமை அதிருப்தி என தகவல்
* இந்து முறையும் அப்துல் வகாப் சீட் வாங்க முயற்சி
* டி.பி.எம்.மைதீன் கானுக்கு சீட் கிடைக்க வாய்ப்பு

இதனிடையே, நெல்லை மத்திய மாவட்ட திமுகவில் நிலவி வரும் உட்கட்சி பிரச்சனை காரணமாக இந்த முறை யாருக்கு கட்சி தலைமை சீட் வழங்கும் என்பது தான் அக்கட்சி நிர்வாகிகள் இடையே பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது எம்.எல்.ஏ. ஆக உள்ள அப்துல் வகாப் மீண்டும் சீட் வாங்க காய் நகர்த்தி வரும் நிலையில், கட்சி தலைமை இவர் மீது அதிருப்தியில் உள்ளதால் வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதேபோல் முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன் கான் இந்த முறை எப்படியாவது மீண்டும் சீட் வாங்கி விட வேண்டும் என்ற முனைப்பில் கட்சி தலைமையில் காய் நகர்த்தி வருவதாக கூறுகின்றனர் அக்கட்சியின் நிர்வாகிகள். பாளையங்கோட்டை தொகுதியில் இவருக்கு என்று தனி செல்வாக்கு உள்ள நிலையில், வயது மூப்பை காரணம் காட்டி கடந்த முறை சீட் வழங்காததால், உட்கட்சி பிரச்சனைகளுக்கு தீர்வு கானும் வகையில் இந்த முறை மீண்டும் சீட் வழங்க வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அமைச்சராக இருந்த போது பாளையங்கோட்டை தொகுதி மீது தனி கவனம் செலுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

* அயலக தமிழர் நல வாரிய உறுப்பினராக உள்ள துபாய் மீரான்
* துபாய் மீரானுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தகவல் வெளியானது
* முதல்வரின் நன் மதிப்பை பெற்றவர் துபாய் மீரான் என தகவல்


இந்த ரேஸில் துபாய் மீரான் என்பவரின் பெயரும் இடம் பெற்றுள்ளதாக கூறுகின்றனர் திமுகவினர். துபாய் மீரான் வெளிநாட்டில் இருந்தபோதும் தமிழர்களுக்காக செய்த சேவைகளை பாராட்டி அவரை அயலக தமிழர் நல வாரிய உறுப்பினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்தார். இதனை அரசியல் அங்கீகாரமாக பார்க்கப்படும் நிலையில், முதல்வரின் நன் மதிப்பை பெற்றவர் என்பதால் இந்த முறை இவருக்கும் சீட் வழங்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாளையங்கோட்டை தொகுதி வேட்பாளர்கள் யார் என்பதில் இந்த முறை முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன் கான் மற்றும் துபாய் மீரான் இடையே தான் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Link
ராதாபுரம் - 4 முனைப்போட்டியால் வாக்குகள் சிதறும்

ராதாபுரம் - 4 முனைப்போட்டியால் வாக்குகள் சிதறும்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுத்த 2 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம் கணிப்பு

9
10 hrs 42 mins agoshare
அடுத்த 2 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம்  கணிப்பு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved