Also Watch
Read this
By: Manigandan Raja

திருவள்ளூர் மாவட்டத்தின் தலைநகரான திருவள்ளூர் நகராட்சியில் உள்ள பேருந்து நிலையத்திற்கு மாற்றாக புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என 25 ஆண்டுகால மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு 36.91 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி பேருந்து நிலையத்திற்கான திறப்பு விழா நடைபெற்ற போதிலும் பணிகள் 30 சதவீதம் வரை முடிக்கப்படாமல் இருந்தது, பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 3 மாத காலம் ஆகியும் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் பணிகளை விரைந்து முடிக்காமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவது குறித்து நேற்றைய முன் தினம் நியூஸ் தமிழ் 24x7 தொலைக்காட்சியில் செய்தியாக நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நியூஸ் தமிழ் செய்தி எதிரொலியாக திருவள்ளூரில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தை திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அருண்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
அப்போது மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்து பேருந்து நிலையத்தில் பேருந்துகளை இயக்கி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என திருவள்ளூர் நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved