அரூர் தொகுதிக்குட்பட்ட எம். வெளாம்பட்டி ஊராட்சி நியாய விலை கடை மேற்கூரை பெயர்ந்து கீழே விழுந்த சம்பவம் அப்பகுதியில் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. எம். வெளாம்பட்டி நியாய விலை கடையில் எம்.வெளாம்பட்டி மற்றும் எம்.பள்ளிப்பட்டி ஆகிய இரண்டு கிராமங்களில் இருந்தும் சுமார் 500 குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை வாங்குகின்றனர்.பாழடைந்து காணப்படும் நியாயவிலைக்கடைஇந்நிலையில் இந்த நியாய விலை கடையின் மேற்கூரை திடீரென பெயர்ந்து கீழே விழுந்ததது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கூரை பெயர்ந்து கீழே விழுந்த நேரத்தில் மக்கள் அனைவரும் நியாய விலைக் கடையில் அருகில் இருக்கும் மரத்தடியில் அமர்ந்திருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.பொருட்கள் வாங்கவே அச்சப்படும் மக்கள்மேலும் இந்த எம். வெளாம்பட்டி நியாய விலை கடையில் படிக்கட்டுகள் இடிந்தும் காணப்படுவதால் பொருட்களை வாங்க வரும் மக்கள் ஆபத்தான முறையில் ஏறி இறங்கி செல்கின்றனர். இதேபோல் தற்போது மேற்கூரை பெயர்ந்து கீழே விழுந்த பகுதி குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை வாங்கும் இடமாக இருப்பதால் அங்கு நின்று வாங்கவே பொதுமக்கள் அச்சப்படுகின்றபடுகின்றனர். முற்றிலுமாக சிதிலமடைந்துள்ள இந்த நியாய விலை கடையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Related Link "தாபா" என்ற பெயரில்...