காதலன் மீது போலீசார் வழக்குப்பதிவு : ஹரியானா மாநிலம் குருகிராமில் லிவ் இன் பார்ட்னருடன் ஏற்பட்ட பிரச்சனையில் பெண்ணின் உடலில் சானிடைசர் ஊற்றி தீவைத்து எரித்த காதலன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திரிபுராவை சேர்ந்த 19 வயது பெண், சிவம் என்ற இளைஞரை காதலித்து லிவின் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, சிவம் அப்பெண் மீது சானிடைசரை ஊற்றி தீயை பற்ற வைத்துள்ளார். இதில் படுகாயமடைந்த பெண் மேல் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Related Link டிவி சத்தத்தால் வெடித்த தகராறு