news-tamil-logo

3/19/2026, 2:45:46 AM

news-tamil-logo
more
Advertisement
Home indianews பணத்தை திருப்பி கேட்டதால் சம்பவம்
tv

Also Watch

tv

Read this

பணத்தை திருப்பி கேட்டதால் சம்பவம்

ஜலான், உத்தரப்பிரதேசம்

Posted on: Feb 19, 2026 11:30 AM

19

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பள்ளிக்கு வேலைக்கு சென்ற ஆசிரியர் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் அதிர்ச்சி. அண்டை மாநிலத்தில் பதிவான ஆசிரியரின் செல்போன் சிக்னல். பண்ணை வீட்டில் கழுத்தில் காயங்களுடன் சடலமாக கிடந்த ஆசிரியர். லாஸ்ட் ஃபோன் கால் லிஸ்ட்டை வைத்து ஒட்டுமொத்த கொலைகார கும்பலையும் பிடித்து விசாரணை. ஆசிரியர் கொடூரமாக கொலை செய்யப்பட்டது ஏன்? பின்னணி என்ன?

* பள்ளிக்கு சென்றவர், நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை
* ராகவேந்திராவை பல இடங்களில் தேடி அலைந்த போலீஸ்
* பண்ணை வீட்டில் கிடந்த ராகவேந்திராவின் சடலம்


பிப்ரவரி 11ம் தேதி. வழக்கம்போல காலையில வேலைக்கு போன ஆசிரியர் ராகவேந்திரா சாயங்காலம் 6 மணியாகியும் வீட்டுக்கு வரல. இதனால அவரோட பெற்றோர் பலமுறை மகனுக்கு ஃபோன் பண்ணி பாத்துருக்காங்க. ஆனா ஃபோன் ஸ்விட்ச் ஆப்ல இருந்துருக்கு. இதனால பயந்துபோன பெற்றோர் மகன் வேலை பார்த்த ஸ்கூலுக்கு போய் பாத்துருக்காங்க. ஆனா எங்க தேடியும் அவர காணல. இதனால பதற்றமடைஞ்ச பெற்றோர் ராகவேந்திராவ காணும்ன்னு போலீஸ் ஸ்டேஷன்ல புகார் அளிச்சுட்டாங்க. உடனே அந்த புகார வாங்குன போலீஸ் ராகவேந்திராவ தேடிருக்காங்க. ராகவேந்திராவோட செல்போன் சிக்னல் எங்க பதிவாகியிருக்குன்னு பாத்துருக்காங்க. அப்ப சிக்னல் அண்டை மாநிலமான மத்திய பிரதேசத்துல காட்டிருக்கு. இதனால நேரா அங்க போன போலீஸ், அம்மாநில போலீசார் உதவியோட சிக்னல் காட்டுன இடத்துக்கு போய்ருக்காங்க. அப்ப அங்குள்ள ஒரு பண்ணை வீட்டுல கழுத்துல காயங்களோட ராகவேந்திராவோட சடலம் கிடந்துருக்கு. உடனே அந்த சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்ச போலீஸ் கொலையாளிகள் யாருன்னு விசாரிக்க ஆரம்பிச்சாங்க.

* செல்போனை கைப்பற்றி விசாரணை
* கிருஷ் பால் உள்ளிட்ட 6 பேரை கஸ்டடியில் எடுத்து விசாரணை
* மது மற்றும் சூதாட்டத்துக்கு அடிமையான கிருஷ்பால்

அப்ப சடலத்து பக்கத்துல கிடந்த செல்போன்ன கைப்பற்றுன போலீஸ் அவருக்கு யார் கிட்ட இருந்து அடிக்கடி ஃபோன் வந்துருக்கு, யார் லாஸ்ட்டா கால் பண்ணிருக்கான்னு மொத்த டீடைல்சையும் எடுத்து பாத்துருக்காங்க. அதுல கிருஷ் பால்-ங்குற நபரோட பேரு காட்டிருக்கு. அதவச்சு கிருஷ்பாலோட வீட்டுக்கு போன போலீஸ், வீட்ல பதுங்கியிருந்த 6 பேர கஸ்டடியில எடுத்து விசாரிச்சாங்க.
உத்தரப்பிரதேசம் ஜலான் பகுதியை சேந்தவரு ராகவேந்திரா. இவரு பக்கத்துல உள்ள ஒரு ப்ரைவேட் ஸ்கூல்ல ஆசிரியரா வேலை பாத்துட்டு இருந்தாரு. இவரும் இவரோட உறவினரா கிருஷ் பாலும் ரொம்ப நெருங்கி பழகிருக்காங்க. ஆனா சேர்க்கை சரியில்லாம மதுபோதைக்கு அடிமையாகிருக்காரு கிருஷ் பால். அடுத்து குடும்ப தேவைக்குன்னு ஏதேதோ பொய் சொல்லி ராகவேந்திரா கிட்ட இருந்து பல லட்சங்கள வாங்குன கிருஷ்பால், அத சூதாட்டத்துல போட்டு ஏமாந்துட்டாரு.

* ராகவேந்திராவிடம் இருந்து பணத்தை வாங்கிய கிருஷ்பால்
* பணத்தை திருப்பி கொடுக்காததால் இருவருக்கும் இடையே சண்டை
* காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன் என மிரட்டல்


இதுக்கிடையில, ராகவேந்திராவுக்கு ஏதோ பணத்தேவை ஏற்பட்டிருக்கு. இதனால கிருஷ்பாலுக்கு ஃபோன் பண்ண நபர், எனக்கு அவசரமா பணம் தேவைப்படுது எப்ப, என்னோட பணத்த கொடுப்பிங்கன்னு கேட்ருக்காரு. அதுக்கு கிருஷ்பால் என்கிட்ட இப்போதைக்கு பணம் இல்லை, பணம் இருக்கும் போது கொடுக்குறேன்னு திமிறாக பதில் சொல்லிருக்காரு. இதனால ரெண்டு பேருக்கு இடையில பயங்கர பிரச்னை ஏற்பட்டிருக்கு. போன்ல சண்டை நடந்த மறுநாளே கிருஷ்பாலோட வீட்டுக்கு போன ராகவேந்திரா, என்னோட பணத்த இப்பவே எடுத்து வை, இல்லன்னா உன் மேல போலீஸ் ஸ்டேஷன்ல புகார் அளிச்சுருவேன்னு மிரட்டிருக்காரு. இதனால கடும் கோபமான கிருஷ்பால், ராகவேந்திராவ தாக்க, ரெண்டு பேரும் கட்டிப்புரண்டு சண்டை போட்ருக்காங்க. இதபாத்த அக்கம் பக்கத்தினர் ரெண்டு பேரையும் சமாதானப்படுத்தி அனுப்பி விட்ருக்காங்க.

* ராகவேந்திராவை முடிக்க திட்டம் போட்ட கும்பல்
* காதலியை ராகவேந்திராவுடன் நெருங்கி பழக வைத்த கிருஷ்பால்
* புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டல்


ஆனா, கொலைவெறியோட வீட்டுக்கு போன கிருஷ்பால், நடந்த எல்லாம் விஷயத்தையும் தனது காதலி மற்றும் நண்பர்கள் கிட்ட சொல்லி ராகவேந்திராவ கொலை பண்ண திட்டம் போட்ருக்காங்க. சம்பவத்தன்னைக்கு இவங்க எல்லாரும் மத்திய பிரதேசத்துல இருந்துருக்காங்க. அப்ப ராகவேந்திராவுக்கு ஃபோன் பண்ண நபர், நமக்குள்ள இருக்க பிரச்னையா நாமே பேசி தீர்த்துக்கலாம், நான் இப்ப மத்திய பிரதேசத்துல என் ப்ரண்டோட பண்ணை வீட்ல மது பார்ட்டில இருக்கேன், நீயும் உடனே கிளம்பி வான்னு சொல்லிருக்காரு. இத நம்பி ராகவேந்திராவும் அங்க போக, பண்ணை வீட்ல வச்சு எல்லாரும் மது குடிச்சுருக்காங்க. அடுத்து கிருஷ், பால் தன்னோட காதலிய ராகவேந்திரா கூட நெருக்கமா பழக வச்சு அத போட்டோ எடுத்துருக்காரு. அதுக்கடுத்து மறுநாள் காலையில அந்த போட்டோக்கள ராகவேந்திரா கிட்ட காட்டுன கிருஷ்பால், நான் உன்கிட்ட இருந்து வாங்குன பணத்த திருப்பி கொடுக்க மாட்டேன், அப்படி நீ பணத்த கேட்டான இந்த போட்டோவ சோசியல் மீடியாவுல வெளியிட்டுருவேன்னு மிரட்டிருக்காரு.

* ஃபோனை பறித்து சண்டையிட முயன்ற ராகவேந்திரா
* ராகவேந்திராவை கழுத்தை நெரித்த கும்பல்
* கிருஷ்பால் உள்ளிட்ட 6 பேரை கைது செய்த விசாரணை


அதே மாதிரி மாசம் மாசம் எனக்கு பணத்த தர்றனும்ன்னு சொல்லியும் ராகவேந்திராவ மிரட்டிருக்காரு கிருஷ்பால். இதனால கடும் கோபமான ராகவேந்திரா, அந்த ஃபோன பிடுங்க பாத்துருக்காரு. ஆனா கிருஷ்பாலும் அவரோட காதலி மற்றும் நண்பர்களும், ராகவேந்திராவ சரமாரியா தாக்கி கீழ கிடந்த கயிற்ற வச்சு அவர கழுத்த நெரிச்சுக் கொன்னுட்டு தப்பிச்சு போய்ட்டாங்க. விசாரணையோட முடிவுல் எல்லா உண்மையையும் தெரிஞ்சுக்கிட்ட போலீஸ் கிருஷ்பால் உள்ளிட்ட 6 பேர அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க.

Related Link
பெண்கள் முன்பு அடித்ததால் ஆத்திரம்

பெண்கள் முன்பு அடித்ததால் ஆத்திரம்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
9 hrs 58 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved