news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news காணாமல் போன 7 வயது சிறுமி
tv

Also Watch

tv

Read this

காணாமல் போன 7 வயது சிறுமி

ராஜ்பூர், மத்திய பிரதேசம்

30

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மாயம். தெருத் தெருவாக தேடி அலைந்த பெற்றோர். பாழடைந்த கட்டடத்தின் பின்புறத்தில் உள்ள கால்வாயில் இறந்து கிடந்த கொடூரம். ஈவு இரக்கமற்ற அரக்கனை தெள்ளத்தெளிவாக காட்டிக் கொடுத்த சிசிடிவி. கொடூரனுக்கு துப்பாக்கித் தோட்டாவால் பதிலடி கொடுத்த போலீஸ். நடந்தது என்ன?

வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மாயம்
வீட்டு வாசல்ல விளையாட்டிட்டு இருந்த 7 வயசு சிறுமிய காணுமேன்னு அம்மாவும் அப்பாவும் பதற்றமடைஞ்சிருக்காங்க. அக்கம் பக்கத்து வீட்டுல தேடி பாத்தும் சிறுமி கிடைக்கல. அதுக்கப்புறம், சிறுமியோட அம்மா அப்பா, பக்கத்து வீட்டுக்காரங்கன்னு எல்லாரும் சேந்து காணாம போன சிறுமிய தெரு முழுக்க தேடி அலைஞ்சிருக்காங்க.. அப்ப, அதே தெருவுல, பாழடைஞ்ச கட்டடத்துக்கு பின்புறத்துல உள்ள கால்வாயில பாத்தப்ப, அந்த சிறுமி பேச்சு மூச்சு இல்லாம மயங்கி கிடந்திருக்காங்க. உடனே, ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போனப்ப, சிறுமி ஏற்கெனவே உயிரிழந்துட்டதா மருத்துவர்கள் சொல்லியிருக்காங்க. அதுமட்டுமில்ல, சிறுமிய யாரோ பாலியல் வன்கொடுமை செஞ்சு கழுத்த நெரிச்சு கொன்னுருக்காங்கன்னு மருத்துவர்கள் சொன்னது, சிறுமியோட அப்பா அம்மா தலையில இடி விழுந்த மாதிரி ஆகிருக்கு.

சில நிமிடங்களில் கொடூர சம்பவத்தை அரங்கேற்றிய அரக்கன்
மத்தியபிரதேசம் மாநிலம், ராஜ்பூர சேர்ந்த தம்பதிக்கு 7 வயசுல ஒரு மகளும், 3 வயசுல ஒரு மகளும் இருந்தாங்க. இதுல, 3 வயசு மகள், மாற்றுத்திறனாளி. அந்த சிறுமிகளோட தந்தை பெயிண்டர் வேலை பாத்துட்டு இருக்காரு. அம்மா, நாலஞ்சு வீட்டுல, வீட்டு வேலை செஞ்சுட்டு இருக்காங்க. இந்த சூழல்லதான், கணவன் - மனைவி இருவரும் வீட்டுக்குள்ள இருந்தப்ப தங்களோட மூத்த மகளான 7 வயசு சிறுமி, வாசல்ல விளையாடிட்டு இருந்துருக்காங்க. நம்ம வீட்டு வாசல்தான, கேட்டும் பூட்டி தான இருக்குன்னு நினச்சு சிறுமிய கவனிக்காம விட்டுருக்காங்க. அந்த கேப்லதான் இந்த கொடூர சம்பவம் நடந்திருக்கு.

Related Link

"அம்மாவ பத்தியா தப்பா பேசுற"


சாக்லேட் தருவதாகக் கூறி சிறுமியை அழைத்த இளைஞன்
சிறுமி வீட்டு gate கிட்ட நின்னு விளையாடிட்டு இருந்தப்ப, அந்த வழியா நடந்து போய்ட்டு இருந்த ஒருத்தன், சிறுமி தனியா இருக்குறத நோட் பண்ணிருக்கான். சிறுமியோட அம்மா அப்பா எல்லாரும் வீட்டுக்குள்ள இருக்குறதையும் கவனிச்ச அந்த அரக்கன், சில நிமிடங்கள் சுத்தி முத்தி பாத்து, யாராச்சு வராங்களாங்குறத கவனிச்சிருக்கான். கண்ணுக்கு எட்டுன தூரம் வரை யாருமே இல்லங்குறது உறுதியானதுக்கு அப்புறம், கேட் கிட்ட போய், அந்த சிறுமிக்கிட்ட நைசா பேச்சுக் கொடுத்திருக்கான். இங்க வா பாப்பா, உன் பேரு என்ன,சாக்லேட் வாங்கித்தரேன், என்கூட வரியான்னு கேட்டுருக்கான். வாசல் கேட்ட திறந்தா சத்தம் கேட்டுரும்ங்குறதால, கதவு கம்பிகளுக்கு வழியாவே பேசியிருக்கான்.

Related Link
மகளுக்கு வரன்தேடி தாய்க்கு தகாத உறவு

மகளுக்கு வரன்தேடி தாய்க்கு தகாத உறவு


நைசாக பேசி சிறுமியை கடத்திச் சென்ற கொடூரம்
ரெண்டு நிமிஷம் சிறுமிகிட்ட நைசா பேச்சுக்கொடுத்துட்டு, திரும்பவும் கொஞ்சம் தள்ளி போய் நின்னு யாராச்சு வராங்களான்னு சுத்தி முத்தி பாத்த அந்த இளைஞன், அதுக்கப்புறம், சிறுமிய கொஞ்சம் தள்ளி வரச்சொல்லி, தூக்கிட்டு, விறுவிறுன்னு நடந்து போய்ருக்கான். அதுக்கப்புறம், கொஞ்சம் தள்ளியிருக்குற ஒரு பாழடைஞ்ச கட்டடத்துல வச்சு, சிறுமிய பாலியல் வன்கொடுமை செஞ்சிருக்கான். அப்ப, சிறுமி கத்தி கூச்சல் போட்டதால பயந்தவன், அந்த சிறுமியோட கழுத்த நெரிச்சு துள்ளத்துடிக்க கொன்னுட்டு, எதுவுமே நடக்காத மாதிரி அங்க இருந்து தப்பிச்சுப் போய்ருக்கான்.

Related Link
இரவில் ரவுடியை சாய்த்த கும்பல்

இரவில் ரவுடியை சாய்த்த கும்பல்


அருகில் உள்ள பாழடைந்த கட்டடத்தில் வைத்து வெறிச்செயல்
சிறுமிய கொன்னவன உடனே கைது பண்ணனும்னு சொல்லி, உறவினர்களும், ஊர் மக்களும் போலீஸ் ஸ்டேஷன் முன்னால போராட்டத்துல ஈடுபட்டாங்க. சிசிடிவி கேமராவுல பதிவான காட்சிகள வச்சு, சிறுமிய துடிக்க துடிக்க கொன்னவன போலீஸ் மடக்கிப்பிடிச்சு அரெஸ்ட் பண்ணியிருக்காங்க. விசாரணையில, அவன் அந்த சிறுமியோட உறவினர்-ங்குறது தெரியவந்துருக்கு.ரோட்டுல நடந்து போய்ட்டு இருந்தப்ப, சிறுமி தனியா இருந்தத பாத்து, தூக்கிட்டு போனதாவும், பாலியல் வன்கொடுமை செஞ்சிட்டு அப்படியே விட்டுட்டு போகதான் நினச்சதாகவும், ஆனா, சிறுமி விடாம கத்திக்கிட்டே இருந்ததால கழுத்த நெரிச்சு கொன்னுட்டு கால்வாயில வீசுனதாவும் போலீஸ்ட பிடிபட்ட அரக்கன் வாக்குமூலம் கொடுத்திருக்கான்.

இளைஞரை சுட்டுப்பிடித்த காவல்துறையினர்

போலீஸ்கிட்ட இருந்து தப்பிக்க முயற்சி பண்ண அவன , மிரட்டுறதுக்காக காவலர்கள் வானத்த நோக்கி ஒருமுறை துப்பாக்கியால சுட்டுருக்காங்க. அதுல, துப்பாக்கி குண்டு அவனோடட கால் பகுதில பாஞ்சு அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்துருக்கான். அதுக்குப்பிறகு, அவன ஹாஸ்பிட்டலுக்கு கூப்பிட்டுட்டு போய் சிகிச்சை கொடுத்ததுக்கு, அப்புறம் அவன அரெஸ்ட் பண்ணி தொடர்ந்து விசாரிச்சிட்டு இருக்காங்க போலீஸ்.

Related Link
அரசு கல்லூரியில் கூட்டு பாலியல் வன்கொடுமை

அரசு கல்லூரியில் கூட்டு பாலியல் வன்கொடுமை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

0
1 hr 0 min agoshare
CSK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved