Also Watch
Read this
செங்கல்பட்டில், செய்தியாளர் சந்திப்பின்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உச்சகட்ட டென்சன் ஆனார். கேள்வி கேட்ட செய்தியாளரை அநாகரீகமாக பேசி அங்கிருந்து வெளியே அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. திமுக ஆட்சியில் கரெப்சன், கமிசன், கலெக்சன் இருந்ததாகக் கூறிய வைகோவிடம், அப்போதே ஏன் எதிர்த்து கேள்வி கேட்கவில்லை? என நிருபர் கேட்டதால் வாக்குவாதம் முற்றியது.

செங்கல்பட்டில் வைகோ
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு,வருகை தந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "ஒரு சதுர அடிக்கு இவ்வளவு ரேட்டு என்று வைத்த ஒரே ஆட்சி, திமுக ஆட்சி தான். கமிஷன், அது கட்டிங், பிறகு கரப்ஷன். இதை முதல்வர் விஜய் ஒழித்து விட்டார்," என்று கூறினார். அப்போது, செய்தியாளர் கேள்வி கேட்க, வைகோ பதில் கூற, அந்த இடமே களேபரமானது. அப்போது நடந்த வாக்குவாதம்;

செய்தியாளர்; அந்த கூட்டணியில் நீங்கள் இருந்தீங்க சார்.
வைகோ ; அந்த கூட்டணியில் இருந்தேன் என்பதை நான் மறுக்காமல் கூறுகிறேன். கூட்டணியில் தான் இருந்தேன்.
செய்தியாளர்; கூட்டணியை விட்டு வெளியே வந்தபிறகு தான் அதை பற்றி பேசுகிறீர்களே?
வைகோ; கூட்டணியில் இருந்து கொண்டு பேசுவது அயோக்கியத்தனம் இல்லையா? கூட்டணிக்கு உள்ளே இருந்து கொண்டு கூட்டணியை அட்டாக் செய்வது, என்ன அரசியல் தர்மம்? கூட்டணி தர்மத்துக்காக பேசாமல் இருந்தேன். அதில் என்ன தவறு? அதுதான் சரியான அணுகுமுறை. கூட்டணியில இருந்துகொண்ட விமர்சனம் கூடாது. உங்கள் கருத்தை நான் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்? நானும் கேள்வி கேட்பேன்.

கோபப்பட்ட வைகோ
அப்போது, திருக்குறளை செய்தியாளர் மேற்கோள் காட்ட, "1330 திருக்குறளையும் நானும் சொல்வேன்” என்று, வைகோ மீண்டும் கோபத்தை வெளிப்படுத்தினார். அத்துடன், “நீங்கள் திட்டமிட்டு வந்துள்ளீர்கள் என எனக்குத் தெரியும். நீங்கள் எந்த பத்திரிக்கை? நீங்கள் மஞ்சள் பத்திரிக்கையா? நீங்கள் திட்டமிட்டு வந்து உள்ளீர்கள். யார் உங்களை ஏவி விட்டது? உங்கள் பத்திரிக்கை முதலாளி ஏவி விட்டாரா? என்னை அவமானப்படுத்தி அரைப் பக்கம் எழுதினீர்களே, வழக்கு போடுவேன்" என்று ஆவேசப்பட்டார். இதனை தொடர்ந்து வாக்குவாதம் முற்றவே, பரபரப்பு ஏற்பட்டது.