Also Watch
Read this
Posted on: Feb 17, 2026 11:45 AM
By: Manigandan Raja
அறையில் மூச்சு பேச்சு இன்றி மயங்கிக் கிடந்த பெண். நெஞ்சு வலி ஏற்பட்டு தாய் இறந்து விட்டதாக கதறி அழுத இளம்பெண். பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கொந்தளித்த உறவினர்கள். போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்டால் வெளிவந்த பகீர் உண்மை. பெற்ற தாயை மகளே இரவோடு இரவாக போட்டு தள்ளியது ஏன்? இளம்பெண்ணின் கொடூர செயலுக்கு என்ன காரணம்? நடந்தது என்ன?
தாய் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக கதறல்
காலை நேரம், சொந்தக்காரங்களுக்கு ஃபோன் பண்ண 26 வயசான ராணி-ங்குற இளம்பெண், அம்மா தூக்கத்துல ஹார்ட் அட்டாக் வந்து உயிரிழந்துட்டாங்கன்னு சொல்லி கதறி அழுதுருக்காங்க. உடனே, உறவினர்கள் எல்லாரும் கர்நாடக மாநிலம் பெங்களூர்ல உள்ள சுசித்ரா, வீட்டுக்கு வந்துட்டாங்க. தாய் சடலத்துக்கு பக்கத்துல உக்காந்து கண்ணீர் வடிச்சிட்டு இருந்த சுசித்ரா, அம்மாவுக்கு ரொம்ப கஷ்டம் கொடுக்க வேண்டாம், சீக்கிரம் காரியத்த முடிச்சு அடக்கம் பண்ணிடலாம்னு அழுதுட்டே சொல்லிருக்காங்க.
அதுக்கப்புறம், சொந்தக்காரங்களாம் சேந்து புஷ்பாவதிக்கு இறுதிச் சடங்கு ஏற்பாடுகள பண்ண தொடங்குனாங்க. அப்போ, சடலத்த குளிப்பாட்ட ஏற்பாடு செஞ்சப்போதான், அங்க இருந்த உறவினர்களுக்கும், அக்கம்பக்கத்துல இருந்தவங்களும் சின்ன சந்தேகம் வந்துருக்கு. அதாவது, புஷ்பாவதி மாரடைப்புல உயிரிழந்தா, உடல் இயல்பா இருக்கும், ஆனா அவங்களோட கழுத்து பகுதில நீல நிறத்துல தழும்பும், நகக்கீறல்களும் இருந்துருக்கு.
மகள் சுசித்ரா மீது உறவினர்களுக்கு ஏற்பட்ட சந்தேகம்
இத கவனிச்ச உறவினர்கள் சிலர், அந்த காயத்த பத்தி கேக்க, சுசித்ரா அதுக்கு பதில் சொல்லாம பேச்ச மாத்திருக்காங்க. அம்மா நெஞ்சு வலி வந்தப்போ தவிச்சிருப்பாங்க, அப்போ அவங்களே கீறிக்கிட்டு இருப்பாங்க அப்படின்னு முன்னுக்குப் பின் முரணா பதில் சொல்லிருக்காங்க சுசித்ரா. அதுமட்டும் இல்லாம, வழக்கமா நடக்குற சடங்குகள்ல கூட அரைகுறையா முடிச்சுட்டு, சடலத்த சீக்கிரம் எடுக்க சொல்லி பிடிவாதம் பிடிச்சிருக்காங்க.
ஊர்ல உள்ள சொந்தக்காரங்களாம் வந்துட்டு இருக்காங்க, கொஞ்சம் வெயிட் பண்ணலாம்னு கூட இருந்த உறவினர்கள் சொல்ல, அதுக்கு சுசித்ரா, சம்மதிக்கவே இல்ல. அது மட்டுமில்லாம, பெங்களூருல உள்ள மயானத்துல தாய் புஷ்பாவதியோட சடலத்த புதைக்கிறதுக்கு ஏற்கனவே புக்கும் பண்ணிருந்துருக்காங்க. சுசித்ராவோட இந்த அவசரமும், புஷ்பாவதியோட கழுத்துல இருந்த அந்த காயமும் உறவினர்களுக்கு மத்தியில பெருத்த சந்தேகத்த ஏற்படுத்திச்சு. இதுக்கு நடுவுல, அங்க இருந்த ஒருத்தரு ரகசியமா போலீஸுக்கு ஃபோன் பண்ணி, தன்னோட உறவினர் மரணத்துல சந்தேகம் இருக்கு சீக்கிரம் வாங்கன்னு சொல்லிருக்காரு.
போஸ்ட் மார்ட்டம் செய்ய மறுப்பு தெரிவித்த சுசித்ரா
அடுத்த கொஞ்ச நேரத்துல ஸ்பாட்டுக்கு வந்துருக்காங்க போலீஸ். அவங்கள பாத்ததும் சுசித்ராவுக்கு கை, கால்களாம் நடுநடுங்கிருக்குது. அப்ப, புஷ்பாவதியோட மரணத்துல எங்களுக்கு சந்தேகம் இருக்கு, அதனால, சடலத்த போஸ்ட் மார்ட்டம் பண்ணனும்னு போலீஸ்காரங்க சொல்லிருக்காங்க. ஆனா, சுசித்ரா, தாய் புஷ்பாவதியோட சடலத்த போஸ்ட் மார்டம் பண்றதுக்கு ஒத்துக்கவே இல்ல. அதான் அவங்க இறந்து போய்ட்டாங்கள்ல, பேசாம அடக்கம் பண்ற வேலையவிட்டுட்டு எதுக்கு போஸ்ட் மார்டம்லாம் பண்ணனும், இறந்ததுக்கு அப்புறமும் என் அம்மாவோட உடல கூறு போடுறத என்னால தாங்கிக்க முடியாதுன்னு சென்டிமெண்ட்டா சொல்லி தடுக்கப் பாத்திருக்காங்க.
சுசித்ராவிடம் நடத்திய விசாரணையில் பகீர் தகவல்
ஒருவழியா சுசித்ராவ சமாளிச்சு புஷ்பாவதியோட சடலத்த மருத்துவக் குழுவினர் போஸ்ட் மார்டம் பண்ணிட்டாங்க. போஸ்ட் மார்டம் முடிஞ்சதும் அவங்க உடல அடக்கமும் பண்ணிட்டாங்க. அதுக்கப்பிறகு, ரெண்டு நாளைக்கு அப்புறம் புஷ்பாவதியோட போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் வந்ததும், சொந்தக்காரங்க எல்லாரும் அதிர்ச்சியில உறஞ்சு போய் நின்னுருக்காங்க. ஏன்னா, புஷ்பாவதி நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழக்கல, யாரோ அவங்க கழுத்த நெரிச்சு கொன்னுருக்காங்கன்னு ரிப்போர்ட்ல குறிப்பிடப்பட்டிருந்துச்சு.
ரிப்போர்ட்ல புஷ்பாவதியோட மரணம் கொலைன்னு தெரிஞ்சதுமே, எல்லாரோட சந்தேகப்பார்வையும் மகள் சுசித்ரா, மேல தான் திரும்பியிருக்கு. ஏன்னா, போஸ்ட் மார்டம்னு சொன்னதும் சுசித்ரா,பதற்றமானதுதான். அதனால, போலீஸ், சுசித்ராவ காவல் நிலையத்துக்கு அழச்சிட்டு போய் விசாரிச்சப்பதான், மொத்த உண்மையும் வெளிச்சத்துக்கு வந்துச்சு.
கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு குடைச்சல்
பெங்களூருவ சேர்ந்த புஷ்பாவதியோட கணவர் சில வருஷங்களுக்கு முன்னாடி உடல்நலக்குறைவால உயிரிழந்துட்டாரு. இவங்களுக்கு ஒரே மகள் சுசித்ரா மட்டும்தான். 26 வயசான சுசித்ரா, பல இடங்கள்ல வட்டிக்கு கடன் வாங்கிருக்காங்க. கடன் கொடுத்தவங்க வட்டியையும் அசலையும் கொடுக்க சொல்லி சுசித்ராவுக்கு குடைச்சல் கொடுத்துட்டே இருந்ததா சொல்லப்படுது. என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்ச சுசித்ரா, இது சம்மந்தமா தாய் புஷ்பாவதிக்கிட்ட சொல்லிருக்காங்க. அதுக்கு அவங்க நீ எதுக்கு வட்டிக்கு பணத்த வாங்குன. நீ கடன் வாங்குன பணத்த நீயே வேலைக்கு போய் சம்பாரிச்சு குடுன்னு திட்டவட்டமா சொல்லிருக்காங்க.
பணம் தர முடியாது என திட்டவட்டமாக கூறிய புஷ்பாவதி
பெத்த அம்மாகூட தனக்கு உதவி பண்ண மாட்டேன்னு சொன்னதும், சுசித்ராவுக்கு உச்சகட்ட கோபத்த ஏற்படுத்திச்சு. நாளாக நாளாக கடன் குடுத்தவங்க தொல்லையும் அதிகரிச்சிருக்குது. இந்த சூழல, சுசித்ராவுக்கு ஒரு குருட்டு யோசனை வந்துருக்கு. அதாவது, தாய் புஷ்பாவதிக்கிட்ட 40 லட்சம் ரூபாய் பணம் இருக்கு, அது கிடைச்சா தன் எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வு கிடைச்சிடும்னு நினைச்சவங்க, தாய் புஷ்பாவதிய கொலை செய்ய திட்டம் போட்டுருக்காங்க.
போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்டால் வசமாக சிக்கிய சுசித்ரா
சம்பவத்தனைக்கு நைட்டு, தாயோட ரூமுக்கு போன சுசித்ரா, அங்க ஆழ்ந்து தூங்கிட்டு இருந்த புஷ்பாவதியோட கழுத்த நெரிச்சு கொன்னுருக்கா. புஷ்பாவதி உயிரிழந்துட்டாங்கன்னு உறுதிப்படுத்துன சுசித்ரா, எந்த பதற்றமும் இல்லாம தன்னோட ரூமுக்கு போய் படுத்து தூங்கிருக்கா. அதுக்குப்பிறகு, மறுநாள் காலையில, எதுவும் தெரியாத மாதிரி சொந்தக்காரங்களுக்கு ஃபோன் போட்டு, அம்மாவுக்கு தூக்கத்துலயே ஹார்ட் அட்டாக் வந்து உயிரிழந்துட்டாங்கன்னு சொல்லி நாடகமாடிருக்காங்க.
காவல்துறையினர் விசாரணையில, புஷ்பாவதியோட மரணம் இயற்கை இல்ல, பெத்த மகள் சுசித்ராதான் பணத்துக்காக ஈவு இரக்கமே இல்லாம பெத்த தாய கொலை செஞ்சிருக்க அப்டிங்குறது தெரியவந்துச்சு. அடுத்து, ராணி மேல கொலை வழக்குப்பதிவு செஞ்ச காவல்துறையினர் அவங்கள அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சிருக்காங்க.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved