Also Watch
Read this
By: Manigandan Raja

ஸ்ரேயஸ் ஐயர் மீது அதிருப்தியில் உள்ள பிசிசிஐ
இந்திய அணியின் டி-20 போட்டிகளில் கேப்டன் பதவி ஸ்ரேயஸ் ஐயரிடமிருந்து பறிக்கப்பட்டு, அந்த பதவி ஒருநாள் போட்டிகளில் கேப்டன் சுப்மன் கில்லுக்கு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. டி-20 போட்டிகளில் இந்திய அணியின் தொடர் தோல்வி காரணமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மீது பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
கம்பீரால் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல முடிவும் - ABD

அயர்லாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டி-20 தொடரை இந்திய அணி இழந்த நிலையில், இந்திய அணியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் தகுதி தலைமை பயிற்சியாளர் கம்பீருக்கு உள்ளதாக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்தார். இது ஐசிசி போட்டிகள் என்பதால் ஐபிஎல் வீரர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.
ரோகித் சர்மா நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவார்

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் சீனியர் வீரர் ரோகித் சர்மா பெரிய அளவில் சோபிக்காத நிலையில், இரண்டாவது போட்டியில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவார் என தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் நம்பிக்கை தெரிவித்தார். எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல், எந்தவித கூடுதல் அழுத்தமும் இன்றி ரோகித் ஆட வேண்டும் எனவும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
ஃபிபா உலகக்கோப்பை இரண்டாவது அரையிறுதி போட்டி
ஃபிபா உலகக்கோப்பை இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை 2க்கு 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜெண்டினா இறுதி போட்டிக்கு முன்னேறியது. அதன்படி ஞாயிற்று கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் கோப்பையை வெல்ல அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது.