அரசியலில் போகும் இடம் தெரியாமல், அலைந்து கொண்டிருக்கும் ஓ.பன்னீர்செல்வம், மீண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியதோடு அல்லாமல், மீண்டும் திமுக ஆட்சி அமையும் என புகழ் மாலை சூட்டியிருக்கிறார். இதனால் திமுகவில் OPS இணைகிறாரா? என்ற விவாதம் எழும்பியுள்ளது. திமுகவை பரம எதிரியாக பார்க்கும் அதிமுகவில் இருந்து கொண்டு, அடிக்கடி திமுகவுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கும் OPSன் திட்டம் தான் என்ன என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு. * சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ஓ.பி.எஸ். * சட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் இன்னும் முடிவெடுக்காத நிலையில் சந்திப்பு* முதலமைச்சரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம்அரசியலில் நிலையான இருப்பிடம் இல்லாமல், கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் ஓ.பி.எஸ். அறிவாலயத்தில் கரை சேருகிறாரா? என்பது தான் தற்போதைக்கு இருக்கும் ஹாட் டாப்பிக்.அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக செல்வாக்கு கொண்ட நபராக இருந்தார் ஓ.பன்னீர் செல்வம். ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியலும் பலத்த அடி வாங்கி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். முதலமைச்சர் பதவியை இழந்து சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தம் செய்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் இணைந்த பின்னரும் அமைதியாக இருக்காமல் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக காய் நகர்த்தியதால் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார்.* 5 ஆண்டு காலம் சிறப்பாக ஆட்சி நடத்தியதற்கு பாராட்டு தெரிவித்ததாக பேட்டி* மீண்டும் திமுக தான் ஆட்சிக்கு வரும் என அகம் மகிழ்ந்து ஓ.பி.எஸ். பேட்டி* திமுகவில் இணைவீர்களா? என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என பதில்அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், சில காலம் பாஜக ஆதரவில் பகுமானமாக வலம் வந்த ஓ.பன்னீர் செல்வத்தை, பாஜகவும் கழற்றி விட்டது. 2024 மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் ஓ.பி.எஸ். அதன்பிறகு பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார். இடையில் என்ன செய்வது என தெரியாமல் விஜய்க்கு கூட ஆதரவாக பேட்டி கொடுத்து தூண்டில் போட்டு பார்த்தார். ஆனால், எந்த மீனும் சிக்காத நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் நிலையே அந்தோ பரிதாபம் ஆகியிருக்கிறது. ஓ.பன்னீர் செல்வத்தை நம்பியிருந்த மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் ஆகியோர் திமுகவில் ஐக்கியமாக, OPSக்கு அரசியல் ஆலோசகராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் கூட புதிதாக கட்சி தொடங்கி வேறு வேலையை பார்க்க தொடங்கி விட்டார்.* தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும் * ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன் சட்டமன்றத்தில் பரபரப்பு பேச்சு* அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற ஐயப்பன் முதலமைச்சரை புகழ்ந்து பேசினார் இந்த சூழலில் தான், திடீரென சட்டப்பேரவை வளாகத்தில் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஓ.பி.எஸ். பேசியிருக்கிறார். இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த ஓ.பி.எஸ். 5 ஆண்டு காலம் சிறப்பாக ஆட்சி நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்ததாக கூறினார். அதோடு, மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும் என்ற ஓ.பன்னீர் செல்வம், திமுகவில் இணைகிறீர்களா? என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என புன்னகையுடன் பதிலளித்து விட்டுச் சென்றார்.* அரசியலில் போகும் இடம் தெரியாமல் இருக்கும் ஓ.பி.எஸ்., திமுகவில் ஐக்கியமா?* அதிமுகவின் எதிரியாக பார்க்கப்பட்ட திமுகவை புகழ்ந்து பேசி வரும் திட்டம் என்ன?* ஓ.பன்னீர் செல்வம் திமுக கூட்டணியில் இணைகிறாரா? என்ற எதிர்பார்ப்பு உள்ளதுமுன்னதாக, சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளில் பேசிய ஓ.பி.எஸ். ஆதரவாளரும், உசிலம்பட்டி எம்.எல்.ஏ.வுமான ஐயப்பன், எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆசியுடன் மீண்டும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார் என குண்டை தூக்கிப் போட, திமுகவினரே இன்ப அதிர்ச்சியில் கைத்தட்டி மகிழ்ந்தனர்.வரும் சட்டமன்ற தேர்தலில், ஓ.பன்னீர் செல்வம் இன்னும் கூட்டணி அறிவிப்பை வெளியிடவில்லை. அதிமுகவில் இணைய மீண்டும் ஓ.பன்னீர் செல்வம் விரும்பினாலும், அவரை ஏற்கும் முடிவில் எடப்பாடி பழனிச்சாமி இல்லை. பாஜக உதவியை எதிர்பார்த்து காத்திருந்த ஓ.பி.எஸ்.க்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால், கடும் அதிருப்தியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்திருக்கிறார். ஏற்கனவே சில முறை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து இருந்தாலும், தற்போதைய சந்திப்பின் பின்னணியில் பல காரணங்கள் இருப்பதாக பேசிக் கொள்ளப்படுகிறது.* பாஜக மீது அதிருப்தியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், திமுகவில் இணைய வாய்ப்பு* திமுக உறுப்பினராக இணைகிறாரா? தேர்தல் கூட்டணியாக இணைகிறாரா?* கடைசி வரைக்கும் திமுகவை எதிர்த்து பேசிய MGR, ஜெ., வழி வந்தவர் ஓ.பி.எஸ்.,அரசியலில் எங்கு செல்வது? யார் கையை பிடிப்பது? என தெரியாமல் குழப்பத்தில் இருக்கும் OPS, அறிவாலயம் பக்கம் கரை சேர வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள். அதிமுக தலைமை விஷயத்தில் பாஜகவை நம்பி ஏமாந்து போன ஓ.பி.எஸ்., அதற்கு எதிராக திமுக அணியில் ஐக்கியமாக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அடுத்து வரும் வாரங்களில் அதிகாரப்பூர்வமாக திமுகவில் OPS ஐக்கியமாகலாம் எனவும் சொல்லப்படுகிறது. இருப்பினும், திமுகவின் உறுப்பினராக ஐக்கியமாக போகிறாரா? அல்லது தேர்தல் கூட்டணியாக ஐக்கியமாக போகிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. திமுக ஆட்சியை வீழ்த்தி அதிமுக ஆட்சிக்கு வரும் என பேச வேண்டிய இடத்தில் இருந்த ஓ.பன்னீர் செல்வம், மீண்டும் திமுகவே ஆட்சிக்கு வரும் என அகம் மகிழ்வது வேடிக்கையாக தான் இருக்கிறது.இதன் மூலம், மதுரை, தேனி, நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கணிசமாக வசிக்கும் முக்குலத்தோர் சமூக வாக்குகள் திமுகவுக்கு கிடைக்க வாய்ப்பு என கருதப்படுகிறது. இதனால் தான் திமுகவுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்க தொடங்கி இருக்கிறாராம் ஓ.பன்னீர்செல்வம். Related Link வரும் தேர்தலில் கண்டிப்பாக வெல்வோம்- முதல்வர்