news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பேற்காமல் நழுவுவதா? முதலமைச்சருக்கு இபிஎஸ் கேள்வி
tv

Also Watch

tv

Read this

சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பேற்காமல் நழுவுவதா? முதலமைச்சருக்கு இபிஎஸ் கேள்வி

முதலமைச்சர் மறைமுக ஒப்புதல் - இபிஎஸ்

21

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

போதைப் பொருள் புழக்கத்தை தட்டிக் கேட்டால் இந்த ஆட்சியில் கொலை தான் பதிலா? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தான் மாற்றமா?
இதுதொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது;
சென்னை, தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்ட 23 வயது இளைஞர் விஷ்ணு, அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சி தருகிறது. போதைப் பொருள் புழக்கத்தை தட்டிக் கேட்டால் கொலை தான் இந்த ஆட்சியில் பதிலா? இது தான் மாற்றமா?

இந்த லட்சணத்தில், திருச்சியில் பேசிய முதல்வர், தன் மீது வீண் பழி போடுவதாக ஆதங்கப் படுகிறார்.இவர் அதிகாரிகளை நியமித்து விட்டாராம். நியமித்தால் போதுமா? இதே அதிகாரிகள் தானே எல்லா ஆட்சியிலும் பணி புரிந்தனர்? மாற்றம் என்பது ஆட்சியாளரிடம் வர வேண்டும். காவல்துறையை கையில் வைத்திருப்பவர், சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பேற்காமல் நழுவ முயல்வது வெட்கக்கேடு. இதில், போதைப் பொருளை தன்னால் ஒழிக்க முடியாது என்று மறைமுகமாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

யாரும் கேள்வி கேட்கக் கூடாதா?
சிங்கப்பெண் அதிரடிப் படையை அடுத்த வாரம் துவக்கி வைப்பாராம். கடந்த வாரம் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில்,எதற்கு நீங்கள் கடைசி நிமிடத்தில் ரத்து செய்தீர்கள்? உங்கள் உதவியாளர் வீட்டு விழாவை சிறப்பிக்க தமிழக பெண்களின் பாதுகாப்பை Compromise செய்தீர்களா? நீங்கள் அடுத்த வாரம் துவக்கும் வரை தமிழகப் பெண்கள் பாதுகாப்பு இன்றி இருக்க வேண்டுமா? “ஆட்சி நடத்துவது எப்படி?” என்று, நீங்கள் ஆறு மாத Crash Course முடிப்பதற்குள் மக்கள் மடிந்து கொண்டே இருக்க வேண்டுமா? அதை யாரும் கேள்வி கேட்கக் கூடாதா? ஒரு முறையான முதல்வராக இல்லாவிடினும், ஒரு கட்சித் தலைவராகவாவது முறையாக உள்ளாரா என்றால், அதுவும் இல்லை.

எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்?
தூத்துக்குடி அருகே கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. கடந்த 3 வாரங்களில் எத்தனை ஆளுங்கட்சி நிர்வாகிகள் கொடும் குற்றச் செயல்களுக்காக கைது செய்யப்பட்டு உள்ளார்கள்? ஒரு கட்சித் தலைவராக, தன் கட்சியினரை அடக்கி வைக்க முடியாதவர், எப்படி காவல் துறையை நிர்வகிப்பார்? இப்படிப்பட்ட ஆட்சி எப்படி மக்களைக் காக்கும்? எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்?

நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
தான் வசிக்கும் பொறுப்பின் தன்மையை உணராமல், இன்னும் பஞ்ச் டயலாக் பேசும் ரீல் ஹீரோவாகவே தன்னை பாவித்துக் கொள்ளும் பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர், அந்த மாய உலகில் இருந்து வெளியே வந்து, தான் வகிக்கும் பொறுப்பின் தலையாயப் பணியான சட்டம் ஒழுங்கைக் காக்கும் Responsibility எடுத்து, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

Related Link
ஏன் நாங்கள் எல்லாம் கோட் சூட் போடக்கூடாதா? முதலமைச்சர் விஜய் சாடல்

ஏன் நாங்கள் எல்லாம் கோட் சூட் போடக்கூடாதா? முதலமைச்சர் விஜய் சாடல்

            


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜங்கிள் புக் மோக்லி சிறுமி உயிரிழப்பு!

3
10 hrs 6 mins agoshare
mowgli girl








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved