news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news ஏன் நாங்கள் எல்லாம் கோட் சூட் போடக்கூடாதா? முதலமைச்சர் விஜய் சாடல்
tv

Also Watch

tv

Read this

ஏன் நாங்கள் எல்லாம் கோட் சூட் போடக்கூடாதா? முதலமைச்சர் விஜய் சாடல்

அல்லுசில்லுக்கு வேலையே இல்ல...

15

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திருச்சி கிழக்கில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், 6 மாதங்கள் அமைதியாக இருப்போம் எனக்கூறியவர்களால் 6 நாட்கள்கூட அமைதியாக இருக்க முடியவில்லை எனவும் தவெக ஆட்சிக்கு வந்த அரைமணி நேரத்திலேயே புலம்பல்களை ஆரம்பித்து விட்டதாகவும் விமர்சனம் செய்துள்ளார். ஏன் நாங்கெல்லாம் கோட் சூட் போடக்கூடாதா? வேரில் வெந்நீரை ஊற்றினால் வெளிச்சம்போட்டு காட்டக்கூடாதா? என கேள்வி எழுப்பியதோடு, தீய சக்தியும், தீர்ந்துபோன சக்தியும் சேர்ந்து ஆட்சியமைக்க நினைத்தது தவெகவால் தடைபட்டுவிட்டது எனவும் சாடி உள்ளார்.

திருச்சியில் முதலமைச்சர்
வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக முதலமைச்சர் விஜய் திருச்சிக்கு இன்று வருகை தந்தார். விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு பயணம் மேற்கொண்டார். முன்னதாக, திருச்சி விமான நிலைய வளாகத்தில் முதலமைச்சர் விஜய்க்கு காவல்துறை மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ரமேஷ், மதிமுக எம்.பி. துரைவைகோ ஆகியோர் வரவேற்றனர். திருச்சி விமான நிலையத்தில் இருந்து புனித ஜோசப் கல்லூரிக்கு பிரச்சார வாகனத்தில் சென்ற முதலமைச்சர் விஜய், சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தை சுமார் ஒரு மணிநேரமாக கடந்து, வழிநெடுகிலும் திரண்டிருந்த மக்களை சந்தித்தபடி பயணம் மேற்கொண்டார்.

நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம்
இதனை தொடர்ந்து, பொதுக்கூட்ட மேடைக்கு வந்த முதல்வர் விஜய், நன்றி தெரிவித்து பேசியதாவது;
மாற்றி மாற்றி ஏமாற்றிக் கொண்டிருந்த இரண்டு கட்சிகளையும் ஒதுக்கிவிட்டு முதலமைச்சராக ஆக்கியிருக்கிறீர்கள். தலைவணங்கி ஒட்டுமொத்தமாக தமிழக மக்களுக்கு நன்றியும் வணக்கமும். நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் குறிப்பாக, திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு எனது ஸ்பெஷல் வணக்கம். தமிழகத்தின் இதயம் திருச்சி என்றால் எனது இதயமும் திருச்சி கிழக்கு தொகுதி தான்.

6 நாள் கூட இருக்க முடியவில்லை
6 மாதம் அமைதியாக இருப்போம் என்றாா்கள்; ஆனால் 6 நாள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை. எங்கு புலம்புவது என தொியாமல் திருமண நிகழச்சிக்கு சென்று கூட புலம்புகிறாா்கள். திமுகவின் தோல்விக்கு காரணம் தேடுகிறாா் மு.க.ஸ்டாலின், உங்கள் குடும்பம் தான் காரணம் என தொண்டா்கள் கூறுவது கேட்கவில்லையா? திமுக நடத்தும் குடும்ப அரசியல் தான் தோல்விக்கு காரணம் என ஒவ்வொரு திமுக தொண்டரும் கூறுகிறாா்கள்.

இன்னும் கொஞ்சம் ஆதரித்திருக்கலாம்
பொியாா், அண்ணா, எம்ஜிஆா் வழியில் உங்களுக்காக உழைக்க வந்துள்ளேன். எனக்கு முழு ஆதரவு தெரிவித்தீர்கள். இன்னும் கொஞ்சம் அதிகமாக ஆதாித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனாலும், எதிர்காலத்தில் வரும் தேர்தல்களின் மக்களின் முழு ஆதரவையும் பெற முடியும் என்று நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் தற்குறி தற்குறி என்று கூறியவா்கள் தான் இன்று உங்களை கேள்விக்குறி ஆக்கியிருக்கிறாா்கள். உங்களுக்கு ஓட்டு போட்டால் நல்லவா்கள், எங்களுக்கு ஓட்டு போட்டால் தற்குறிகளா? ரீல்ஸ் போட்ட கூட்டம் தான் இன்று தவெக ஆட்சி அமைந்த பின்னா் நியூஸ் பாா்க்கிறாா்கள்.

கோட், சூட் போடக்கூடாதா?
ஏன் நாங்கள் கோட், சூட் போடக்கூடாதா? அதிகாரம் செலுத்துபவா்கள் தான் கோட், சூட் போட வேணுமா? நம் மனது போலவே கருப்பு, வெள்ளையில் தான் கோட், சூட் போடுகிறேன், கலா் கலராக ஒன்றும் போடவில்லையே. தோ்தலுக்கு முன்பு ஒன்றும் செய்யாதவா்கள், இப்போது அதிகாரத்தில் இல்லாமல் சும்மாவே இருக்கிறாா்கள். இன்றும் இரு சக்திகள் இடையில் தான் போட்டி, ஒன்று தூய சக்தி தவெக, மற்றொன்று தீய சக்தி திமுக. அதிமுகவும் திமுகவும் சோ்ந்து நம்மை ஆட்சியமைக்க விடாமல் தடுக்க முயன்றனா். அதனை முறியடித்துள்ளோம்.

முதல்வர் விஜய் உறுதி
அரசியலில் புரையோடிப் போயிருந்த சாதியையும், மதத்தையும், பண பலத்தையும் தவெக உடைத்துள்ளது. எந்த பாகுபாடும் இல்லாத எல்லோருக்குமான ஆட்சியாக தமது ஆட்சி இருக்கும்.
இவ்வாறு முதலமைச்சா் விஜய் உரை நிகழ்த்தினார்.

Related Link
ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,16,000

ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,16,000

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜங்கிள் புக் மோக்லி சிறுமி உயிரிழப்பு!

3
11 hrs 23 mins agoshare
mowgli girl








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved