news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news பட்டப்பகலில் நடந்த பகீர் செயல்
tv

Also Watch

tv

Read this

பட்டப்பகலில் நடந்த பகீர் செயல்

சூர்யா பேட்டை, தெலங்கானா

40

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடோடிச் சென்ற அக்கம் பக்கத்தினர். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அதிர்ச்சி. ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த இளம்பெண். பக்கத்திலேயே கையில் சுத்தியலுடன் ஆக்ரோஷமாக அமர்ந்திருந்த இளைஞர். காதல் விவகாரத்தில் நடந்த கொடூரமா? அல்லது வேறு ஏதும் காரணமா? நடந்தது என்ன?
ஏகப்பட்ட வீடுகள், அடுத்தடுத்து இருக்கக்கூடிய குடியிருப்பு பகுதி அது. ஒரு வீட்டுல கத்தி பேசுனா, பக்கத்து வீட்டுக்கு ஈஸியா கேக்குற அளவுக்கு, வீடுகள்லாம் நெருக்கமா இருந்துருக்கு. அப்படித்தான், ஒரு வீட்டுல இருந்து, திடீர்னு ஒரு பொண்ணு கத்துற சவுண்ட் கேட்டு, அக்கம் பக்கத்துல உள்ளவங்களாம் ஓடிப்போய் பாத்திருக்காங்க. அப்போ, இளம்பெண் ஒருத்தங்க ரத்த வெள்ளத்துல துடிதுடிச்சுட்டு கிடக்க, அவங்க பக்கத்துலேயே இளைஞர் ஒருத்தன் கையில சுத்தியோட ஆக்ரோஷமா உக்காந்துட்டு இருந்துருக்கான்.

* பக்கத்து வீட்டில் கேட்ட இளம்பெண்ணின் அலறல் சத்தம்
* ஓடிச்சென்று பார்த்த அக்கம் பக்கத்தினருக்கு அதிர்ச்சி
* பக்கத்திலேயே கையில் சுத்தியுடன் அமர்ந்திருந்த இளைஞர்


இத பாத்து அதிர்ச்சியடஞ்ச பக்கத்து வீட்டுக்காரங்க, இளம்பெண்ண காப்பாத்த முயற்சி பண்ணிருக்காங்க. ஆனா, ஒருசில வினாடிகள்ளேயே அந்த இளம்பெண்ணோட உயிர் அடங்கிருச்சு. உடனே போலீஸுக்கு தகவல் சொல்லிருக்காங்க. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ், இளம் பெண்ணோட சடலத்த போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சாங்க. அடுத்து, பொதுமக்கள் பிடிச்சு வச்சிருந்த இளைஞன, போலீஸ் ஸ்டேஷனுக்கு கூப்பிட்டுட்டு போய் கவனிக்க வேண்டிய விதத்துல கவனிச்சாங்க. அதுலதான், இந்த கொலைக்கான காரணம் என்னங்குறது தெரியவந்துச்சு.

* சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை
* போலீஸ் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்


தெலங்கானா
மாநிலம், சூர்யாபேட்டைய சேர்ந்த ஸ்பந்தனாங்குற இளம்பெண், செகண்ட் இயர் காலேஜ் படிச்சிட்டு இருந்துருக்காங்க. இவங்களுக்கும் அதே பகுதிய சேர்ந்த மகேஷ்ங்குற இளைஞருக்கும் சோஷியல் மீடியா மூலமா பழக்கம் ஏற்பட்டிருக்குது. இந்த பழக்கம் நாளடைவுல காதலா மாறி, ரெண்டு பேரும் உயிருக்கு உயிரா காதலிக்க ஆரம்பிச்சிருக்காங்க.
கடந்த ரெண்டு வருஷத்துக்கு மேல ஸ்பந்தனாவும், மகேஷும் காதலிச்சுட்டு வந்த நேரத்துல, திடீர்னு அவங்களுக்குள்ள பிரச்சனை வந்திருக்கு. ஸ்பந்தனா வேற ஒரு இளைஞர் கூட வெளிய போனதா சொல்லப்படுது. இத மகேஷ் பாத்து, அவங்க கூட பயங்கரமா சண்ட போட்டுருக்கான். என்ன விட்டுட்டு வேற யார் கூடயோ சேந்து ஊர் சுத்திட்டு இருக்க, என்ன ஏமாத்த பாக்குறீயான்னு கேட்டு தகராறு பண்ணிருக்கான்.

* சோஷியல் மீடியா மூலம் பழக ஆரம்பித்த ஸ்பந்தனா-மகேஷ்
* நாளடைவில் காதலர்களாக மாறிய ஸ்பந்தனா-மகேஷ்
* வேறொரு இளைஞருடன் ஸ்பந்தனா பேசியதால் ஆத்திரம்
* தனக்கு துரோகம் செய்கிறீயா? என கேட்டு மகேஷ் தகராறு


அந்த சம்பவத்துக்கு பிறகு இருந்தே, மகேஷ் -ஸ்பந்தனா இடையில அடிக்கடி சண்ட சச்சரவு ஏற்பட்டிருக்கு. தெனமும் பிரச்சினையாவே போய்ட்டு இருந்ததால, காதலன் மகேஷ்க்கிட்ட பேசுறதையும் பழகுறதையும் ஸ்பந்தனா அடியோட நிறுத்திட்டதா சொல்லப்படுது. ரெண்டு வருஷம் ஆசை ஆசையா பேசி பழகிட்டு, இப்போ திடீர்னு என்ன கழட்டிவிடவா பாக்குறன்னு கேட்டு, மகேஷ் திரும்பவும் சண்ட போட்டுருக்கான். இப்படியே பிரச்சினை பூதாகரமா போய்ட்டு இருந்த நேரத்துலதான், காதலி ஸ்பந்தனவ கொலை செய்ய முடிவு பண்ணிருக்கான் காதலன் மகேஷ்.

* ஸ்பந்தனாவுடன் அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்த மகேஷ்
* மகேஷுடன் பழகுவதை அடியோடு நிறுத்திய காதலி ஸ்பந்தனா
* விலக ஆரம்பித்த ஸ்பந்தனாவின் கதையை முடிக்க மகேஷ் திட்டம்
* மகேஷை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்


சம்பவத்தனைக்கு, மதியம் ஸ்பந்தனா வீட்டுல தனியா இருக்குறத தெரிஞ்சு, அங்க போன மகேஷ், சுத்தியல வச்சு அவங்க தலையிலேயே கண்மூடித்தனமா அடிச்சு கொன்னுருக்கான். போலீஸ் விசாரணையில, மகேஷ் ஒன்னுவிடாம சொல்லவே அவன் மேல மர்டர் கேஸ் ஃபைல் பண்ணி சிறையில் தள்ளிருக்காங்க.

Related Link
விபத்து போல் செட்டப் செய்த பயங்கரம்

விபத்து போல் செட்டப் செய்த பயங்கரம்

             

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசுபள்ளியில் ரீல்ஸ் - தவெக நிர்வாகியை நீக்கிய விஜய்

1
17 mins agoshare
tvk action








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved