Also Watch
Read this
தமது கட்சியினரே குற்றச் செயல்களை செய்வதற்கு முதல்வர் விஜய் என்ன பதில் வைத்திருக்கிறார் என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
வேலை வாங்கித் தருவதாக...
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது;
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த, தூத்துக்குடி மேற்கு மாவட்ட தவெக இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன், ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த தவெக நிர்வாகி ஜெயபால் இருவரும், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை வேலை வாங்கி தருவதாகக் கூறி ஏமாற்றி, கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ள தகவல், மிகுந்த அதிர்ச்சி தருகிறது.

என்ன பதில் வைத்து இருக்கிறார்?
பெண்கள் பாதுகாப்பு குறித்து தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய தவெக தலைவர் விஜய், தமது கட்சியினரே குற்றச் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்? மாற்று அரசியல் என்று கூறி ஆட்சிக்கு வந்த தவெக, இன்று திமுகவின் பாதையிலேயே பயணிக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.

உரிய பாதுகாப்பு ஏற்பாடு
குற்றவாளிகள் இருவர் மீதும், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோல பெண்கள் பாதுகாப்பு கவலைக்கு உள்ளாகும்படியான சம்பவம் நடைபெறாதவாறு, உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும், தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved