news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home nigal-thagavu வீட்டிற்குள் சடலமாக கிடந்த கணவன்.!
tv

Also Watch

tv

Read this

வீட்டிற்குள் சடலமாக கிடந்த கணவன்.!

NigazhThagavu

18

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சடலமாக கிடந்த கணவன்.! 

கடப்பா மாவட்டம், பெண்ட்லிமர்ரி மண்டலம், நல்லைய்யகாரிபள்ளி கிராமத்தில் வசித்து வந்த சித்தா ரெட்டி மற்றும் சுகாசினி தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில காலமாக சித்தா ரெட்டி மதுவுக்கு அடிமையாகி, தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்வது வழக்கமாக இருந்து வந்தது. மனைவி யாரோ ஒருவருடன் தகாத உறவு வைத்திருப்பதாக சந்தேகப்பட்டு, தினமும் துன்புறுத்தி வந்தார்.

வீட்டையும் குழந்தைகளையும் கவனிக்காமல் மது அருந்தி சுற்றித் திரிந்து வந்தார்.மனைவி சுகாசினி கூலி வேலை செய்து குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார்.
இந்நிலையில், வழக்கம்போல இரவு சித்தா ரெட்டி முழு போதையில் வீட்டுக்கு வந்து மீண்டும் மனைவியுடன் தகராறு செய்தார். மேலும் அவரைத் தாக்கி, கொடுமையாக அடிக்கத் தொடங்கினார்.

நீண்டகால துன்புறுத்தல்களையும் வன்முறையையும் தாங்க முடியாமல் பொறுமை இழந்த சுகாசினி, வீட்டில் இருந்த கோடரியை எடுத்து கணவர் மீது தாக்குதல் நடத்தினார். இந்தத் தாக்குதலில் சித்தா ரெட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.பின்னர் சுகாசினி குழந்தைகளை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு சென்றுவிட்டார்.

தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கினார்.

Related Link
டிவி சத்தத்தால் வெடித்த தகராறு

டிவி சத்தத்தால் வெடித்த தகராறு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிட்னஸ் ரகசியம் குறித்து பேசிய நடிகர் சிம்பு

0
10 mins agoshare
சிம்பு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved