Also Watch
Read this
By: Manigandan Raja

(Picture Credit: X/@BCCIWomen)
200 சர்வதேச போட்டிகளில் கேப்டனாக விளையாடிய முதல் இந்தியர் :
இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் வரலாற்று சாதனையை படைத்துள்ளார். சர்வதேச அளவில் 200 போட்டிகளில் கேப்டனாக விளையாடிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை படைத்துள்ளார்.
இதுவரை 145 டி20 போட்டிகளிலும், 51 ஒருநாள் போட்டிகளிலும், 4 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் கேப்டனாக செயல்பட்டுள்ளார். இதற்காக அவரை கவுரவிக்கும் விதமாக நேற்றைய உலகக்கோப்பை போட்டிக்கு முன்னர், 200 என்ற நம்பர் பொறிக்கப்பட்ட ஜெர்சியை அவருக்கு துணை கேப்டன் மந்தனா வழங்கி பாராட்டினார்.
தென்னாப்பிரிக்கா அணியிடம் தோல்வி அடைந்த இந்தியா :
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் அடித்தது.
தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 19.1 ஓவரில் 161 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் இந்திய அணி முதல்முறையாக தோல்வி அடைந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஹாக்கி மகளிர் நேஷன்ஸ் கோப்பை - இந்தியா சாம்பியன் :

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ஹாக்கி மகளிர் நேஷன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்தில் நடந்த இறுதி போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய வீராங்கனைகள் 2 கோல் அடித்து அசத்தினர். நியூசிலாந்து அணியால் கடைசி வரை கோல் அடிக்க முடியாததால், 2-0 என்ற கணக்கில் இந்திய அணி பட்டத்தை வென்றது. வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு தலா 3 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என இந்திய ஹாக்கி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.