Also Watch
Read this
By: Manigandan Raja

வெளிநாட்டு எண்ணெய் டேங்கர் :
ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை, எரிபொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி, பாரசீக வளைகுடாவில் இரண்டு வெளிநாட்டு எண்ணெய் டேங்கர்களைக் கைப்பற்றியது.
சுமார் பத்து லட்சம் லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 15 பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.பறிமுதல் செய்யப்பட்ட எண்ணெய் டேங்கர்கள் எந்த நாட்டினுடையது என்றோ, கைது செய்யப்பட்டவர்கள் அடையாளங்களையோ, ஈரான் அரசு வெளியிடவில்லை.