news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews நெதர்லாந்தில் கடந்த 28-ஆம் தேதி நடந்த வானியல் அதிசயம்
tv

Also Watch

tv

Read this

நெதர்லாந்தில் கடந்த 28-ஆம் தேதி நடந்த வானியல் அதிசயம்

நெதர்லாந்து

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மின்னல் வெடிப்புகள்

ஒரே நாளில் 3,00,000-க்கும் மேற்பட்ட முறை மின்னல் வெடிப்புகள் :

நெதர்லாந்தில் கடந்த 28-ஆம் தேதி ஒரே நாளில் நாடு முழுவதும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட முறை மின்னல் வெடிப்புகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் வானிலை மையம்
தெரிவித்திருப்பது உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மின்னல் புயல் அதன் உச்சக்கட்டத்தை எட்டியபோது, நெதர்லாந்து மற்றும் வடக்கு ஜெர்மனி பகுதிகளில் இந்த அதிசயம் நிகழ்ந்தது. அதாவது, ஒவ்வொரு நொடிக்கும் சுமார் 17 மின்னல் தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன.

106 மணி நேரமாக இடிபாடுகளில் சிக்கித் தவித்த இளைஞர் :

வெனிசுலாவில் நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் இடிந்து விழுந்த நிலையில், 106 மணி நேரமாக உணவு, தண்ணீர் என எதுவுமின்றி இடிபாடுகளில் சிக்கித் தவித்த 21 வயது இளைஞரை மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டனர்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மாயமான ஆயிரக்கணக்கான மக்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இளைஞர் மையத்தில் துப்பாக்கி சூடு- 6 பேர் பலி :

ஜெர்மனியின் ஸ்டாட் ((Stade)) நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர். அங்குள்ள இளைஞர் மையத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப் பட்டதால் மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தலை தெறிக்க ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் 6 பேர் குண்டு பாய்ந்து பலியாகினர். தகவலறிந்து சென்ற போலீசார் இரண்டு இளைஞர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Link
அமெரிக்கா - ஈரான் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை?

அமெரிக்கா - ஈரான் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரூ.200 கோடி மோசடி? - திமுக நிர்வாகி குறித்து வெளியான புதிய தகவல்

0
5 mins agoshare
PT Arasanbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau