Also Watch
Read this
By: Manigandan Raja

சிக்கிம் நிலநடுக்கம் :
சிக்கிம் மாநிலத்தின் கியால்ஷிங் பகுதியில் நள்ளிரவு 1.09 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 அலகுகளாகப் பதிவானது. மக்கள் உறக்கத்தில் இருந்தபோது நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.