Also Watch
Read this
By: Manigandan Raja

உளவுத்துறை தீவிர விசாரணை :
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள அதிபர் டிரம்பின் இல்லத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கி மற்றும் எரிபொருள் அடங்கிய கேன் ஆகியவற்றுடன் மர்ம நபர் நுழைய முயன்றதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அந்த நபரை சுட்டு வீழ்த்தினர்.
கொல்லப்பட்ட நபர் 25 வயதிற்குள் இருக்கலாம் என்றும், விசாரணைக்கு பிறகே நபரை பற்றிய முழு விவரம் தெரிய வரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved