news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews விருந்துக்கு சென்ற காதல் ஜோடி, விபரீதம்
tv

Also Watch

tv

Read this

விருந்துக்கு சென்ற காதல் ஜோடி, விபரீதம்

நைனிடால், உத்தரகாண்ட்

25

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சாலையில் கொடூரமான முறையில் உயிரிழந்து கிடந்த காதல் ஜோடி. ரத்தக் காயங்களுடன் தலை சிதைக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்த இளைஞர் மற்றும் இளம்பெண். 4 பேர் கொண்ட கும்பல் இருவரை அடித்து கொலை செய்யும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி. 4 குற்றவாளிகளையும் கஸ்டடியில் எடுத்து விசாரித்த போலீஸ். இளைஞரும், இளம்பெண்ணும் கொடூரமாக கொலை செய்யப்பட்டது ஏன்? பின்னணி என்ன?

ஆதார் கார்டு மூலம் கண்டறியப்பட்ட அடையாளம்
விருந்து நிகழ்ச்சிய முடிச்சுட்டு, பொதுமக்கள் வீட்டுக்கு கிளம்பிருக்காங்க. அப்ப நடுரோட்ல ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் தலை சிதைக்கப்பட்ட நிலையில ரத்த வெள்ளத்துல கொடூரமா உயிரிழந்து கிடந்துருக்காங்க. இந்த விஷயத்த கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் அங்க கிடந்த பைய கைப்பற்றி அதுக்குள்ள என்னென்ன பொருட்கள் இருக்குதுன்னு செக் பண்ணிருக்காங்க. அதுல ரெண்டு பேரோட ஆதார் கார்டு இருந்துருக்கு. அத எடுத்து பார்த்தப்ப ரெண்டு பேரும் ஹல்த்வானி பகுதிய சேந்த சுபம் மற்றும் லட்சுமின்னு தெரியவந்துச்சு. அதுக்கடுத்து ரெண்டு பேரோட சடலங்கள கைப்பற்றுன போலீஸ், குற்றவாளிகள் யாருன்னு விசாரிக்க ஆரம்பிச்சுருக்காங்க. முதல்ல நிகழ்ச்சியில பங்கேற்றவங்க கிட்ட இருந்து விசாரணைய ஸ்டார்ட் பண்ணிருக்காங்க போலீஸ். ஆனா அவங்களுக்கு எந்த ஒரு துப்பும் கிடைக்கல.. இதனால போலீசார், அந்த பகுதியில உள்ள சிசிடிவி காட்சிகள ஆய்வு பண்ணி பாத்துருக்காங்க. நான்கு நபர்களை கஸ்டடியில் எடுத்து விசாரித்த போலீஸ் அதுல 4 இளைஞர்கள் சுபம் மற்றும் லட்சுமிய கொடூரமாக தாக்கி கல்லால அடிச்சு முகத்த சிதைச்ச காட்சிகள் பதிவாகியிருந்துருக்கு. இதனால சிசிடிவி காட்சியில பதிவாகியிருந்த கௌரவ் நேகி , தீபு சர்மா, சவுரப் பட், தீபேஷ் லட்வால் ஆகிய 4 இளைஞர்கள வலைவீசி தேட ஆரம்பிச்சாங்க. முதல்ல அவங்களோட செல்போன் நம்பர அங்கருந்தவங்க மூலமா வாங்குன போலீஸ், சிக்னல்ல ட்ரேஸ் பண்ணி பாத்துருக்காங்க. அதுபடி சிக்னல் காட்டுன இடத்துக்கு போன போலீஸ் 4 பேரையும் கஸ்டடியில எடுத்து விசாரிச்சாங்க. அதுல தான் பல பகீர் தகவல்கள் வெளியாச்சு.

Related Link
மருமகன் செய்த கொடூர செயல்

மருமகன் செய்த கொடூர செயல்

லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்த சுபம் - லட்சுமி ஜோடி
உத்தரகாண்ட்ல உள்ள நைனிடால் பகுதிய சேந்த சுபம் ஒரு ப்ரைவேட் கம்பெனியில வேலை பாத்துட்டு இருந்தாரு. இவரும் அதே பகுதியை சேந்த லட்சுமியும் உயிருக்கு உயிரா காதலிச்சுட்டு இருந்தாங்க. ஆனா இவங்களோட காதலுக்கு ரெண்டு பேரோட வீட்லையும் எதிர்ப்பு கிளம்பிருக்கு. இதனால வீட்ட விட்டு வெளியேறுன ரெண்டு பேரும் வேற ஒரு பகுதியில உள்ள வீட்ட வாடகைக்கு எடுத்து லிவ்-இன்ல வாழ ஆரம்பிச்சுட்டாங்க.

லட்சுமியிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞர்
இத தெரிஞ்சு கடும் கோபமான ரெண்டு பேரோட பெற்றோரும் அவங்கள பிரிக்க பாத்துருக்காங்க. ஆனா ரெண்டு பேரும் ஒன்னா சேந்து தான் வாழுவோம்ன்னு திட்டவட்டமா சொல்லிட்டாங்க. சம்பவத்தன்னைக்கு ரெண்டு பேரும் ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு போய்ருக்காங்க. அங்க இவங்களோட நண்பர்களான கௌரவ் நேகி, தீபு சர்மா, சவுரப் பட் மற்றும் தீபேஷ் லட்வால்ன்னு 4 பேரும் இருந்துருக்காங்க. இந்த 4 பேரும் சுபத்தையும், லட்சுமியவும் வலுகட்டாயமா மது குடிக்க கூப்டு போய்ருக்காங்க. அப்ப சுபத்தும் லட்சுமியும், நாங்க சும்மா உங்க கூட வர்றோம், ஆனா மதுக்குடிக்க மாட்டோம்ன்னு சொல்லிட்டாங்க. அதுபடி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துல வச்சு 4 பேரும் மது குடிச்சுட்டு இருந்துருக்காங்க. அப்ப அந்த கும்பல்ல ஒருத்தன் லட்சுமி கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணிருக்கான்.

கௌரவ் நேகி, தீபு சர்மா, சவுரப் பட் உள்ளிட்ட 4 பேர் கைது
சுபத்தும், லட்சுமியும் அந்த இளைஞர கண்டிச்சுருக்காங்க. அப்ப ரெண்டு தரப்புக்கும் இடையில பயங்கர பிரச்னை ஏற்பட்டிருக்கு. சுபத்தை அந்த கும்பல் சரமாரியா தாக்கிருக்காங்க. வலி தாங்க முடியாத சுபம் சம்பவ இடத்துலையே சுருண்டு விழுந்துட்டாரு. ஆனா அப்பவும் ஆத்திரம் தீராத கும்பல் மதுபோதையில என்ன செய்றோம்ன்னு தெரியாம கீழ கிடந்த கல்ல எடுத்து சுபத்தோட முகத்துலையே பலமுறை அடிச்சு சிதைச்சு கொன்னுருக்காங்க. இதபாத்த லட்சுமி பயத்துல அலறிருக்காங்க. இந்த கொலைய பத்தி லட்சுமி வெளியில சொல்லிருவான்னு நினைச்ச அந்த கும்பல் அவரையும் சரமாரியா தாக்கிருக்காங்க. அடுத்து கீழ கிடந்த கல்ல வச்சு அவங்களோட முகத்துல பலமுறை தாக்கி சிதைச்சு கொன்னுட்டு தப்பிச்சு போய்ட்டாங்க. ஆனா, சிசிடிவி காட்சிய வச்சு குற்றவாளிகள கன்பார்ம் பண்ண போலீஸ், கௌரவ் நேகி, தீபு சர்மா, சவுரப் பட் மற்றும் தீபேஷ் லட்வால்ன்னு 4 பேர அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க.

Related Link
மகளின் கடன், தாயின் மரணம்

மகளின் கடன், தாயின் மரணம்

             

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
1 hr 4 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved